Tamil News
Home செய்திகள் இடைக்கால அரசாங்கத்தின் கொள்கைகளில் இனப்பிரச்சினைக்கு முன்னுரிமை இல்லை – கூட்டமைப்பினர்

இடைக்கால அரசாங்கத்தின் கொள்கைகளில் இனப்பிரச்சினைக்கு முன்னுரிமை இல்லை – கூட்டமைப்பினர்

கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அவர்களின் கொள்கைகளில் முன்னுரிமை அளிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த விடயம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கையில் இனப்பிரச்சினை கூட குறிப்பிடப்படவில்லை.நல்லிணக்கம் என்பது அரசாங்கத்தை மட்டுமே சார்ந்துள்ளது. ஆனால் இதுவரை, இந்த விடயத்தில் அரசாங்கம் எந்தக் கொள்கையையும் குறிப்பிடவில்லை.

தமிழர்களின் பிரச்சினைகளை புதிய அரசியலமைப்பு மூலம் மட்டுமே தீர்க்க முடியும்.புதிய அரசாங்கம் தயாராக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசத் தயாராகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version