ஆரம்பமாகியது மெய்நிகர் நூலகம்

ஈழத் தமிழர்களின் பொக்கிசமான யாழ். நூலகத்தை சிங்களக் காடையர்கள் எரித்த நாற்பதாவது நினைவு நாளில் புலம்பெயர் தேசத்தவர்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் மெய்நிகர் நூலகம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்வில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். முனைவர் விஜய் அசோகன் அவர்கள் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.

ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கை ஓவியர் புகழேந்தி அவர்கள் ஏற்றி வைத்தார். அவரைத் தொடர்ந்து நடிகரும் தமிழ் ஆர்வலருமான நடிகர் சத்தியராஜ் அவர்கள் நூலகத்தைப் பற்றிய குறிப்புக்களை பகிர்ந்து, நூலகத்தை ஆரம்பித்து ஆசியுரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து இசை நிகழ்வு, நடன நிகழ்வு போன்றன இடம்பெற்றன.

நிகழ்வில் திருக்குறள் அறிவு, நாட்டுப்புறப் பாடகர் புஸ்பவனம் குப்புசாமி, கவிஞர் அநாதிகன், திரைப்பட இயக்குநர் களஞ்சியம், ஊடகவியலாளர் நேரு குணரட்ணம், ஓவியர் புகழேந்தி, எழுத்தாளர் மாலதி, நடிகர் கருணாஸ் போன்ற பலர் தங்களின் வாழத்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் கேள்வி பதில் நிகழ்வு நடைபெற்றது. இதில் பொது மக்களின் கேள்விகளுக்கு முனைவர் விஜய் அசோகன் அவர்கள் பதிலளித்தார்.

https://telibrary.com/en/  இணைப்பின் ஊடாக நூலகம் பற்றி அறியலாம்.