ஆய்வு குழுவினரை சீனா அனுமதிக்க மறுகின்றது – WHO

உலக சுகாதார அமைப்பின் மருத்துவ குழுவை ஆய்வுக்காக சீனாவுக்குள் அனுமதிகாததது வருத்தம் அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா பரவியுள்ளது என்று  அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் 10 பேர் அடங்கிய விஞ்ஞான குழு இம்மாதம் சீனாவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியது.

ஆனால் தற்போது மருத்துவ குழு செல்வதற்கு  சீனா அனுமதிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியாயேசஸ் கூறும்போது,

 “ சீனாவின் உஹான் மாகாணத்தின் ஆய்வகத்தில் சோதனை நடத்துவதற்கு வருகை புரிய இருந்த உலக சுகாதார அமைப்பின் மருத்துவ குழுவுக்கு  சீனா அனுமதி அளிக்கவில்லை. இது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இது தொடர்பாக சீன அதிகாரிகளை நான் தொடர்பு கொண்டுள்ளேன். அவர்களிடம் எனது கருத்தை தெரிவித்து இருக்கிறேன்” என்றார்.

 அமெரிக்காவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து , உஹானின் ஆய்வகத்திலிருந்து  கொரோனா பரவவில்லை. உலகின் பல இடங்களில் கொரோனா வெடிப்பு நிகழ்ந்துள்ளது என்று  சீனா விளக்கமளித்திருந்தது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா  ஊரங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சரிவை சந்தித்து வருவதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில்  கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.