Tamil News
Home செய்திகள் ஆணைக்குழுக்களை அமைக்கும் ரணிலே பதிக்கப்பட்டவர்களையும் அச்சுறுத்துகிறார் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஆணைக்குழுக்களை அமைக்கும் ரணிலே பதிக்கப்பட்டவர்களையும் அச்சுறுத்துகிறார் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கா இனநல்லிணக்கப்பாடுகளுக்கான ஆணைக்குழுக்களை அமைக்கும் அதேசமயம், அவரின் அரசு பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி வருகின்றது. எனவே ரணில் புதிதாக ஆரணக்குழுக்களை அமைப்பதை விடுத்து செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது இலங்கை தொடர்பான 39 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்று (18) வெளியிடப்பட்ட அறிக்கையில்; மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை அரசு தொடர்ந்து மேற்கொண்டுவரும் வன்முறைகள் அதன் திட்டத்தை செயற்திறனற்றதாக்கி வருகின்றது. இலங்கை அரசின் நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட மக்களும், அவர்களின் குடும்பத்தினரும் நிராகரித்துள்ளனர். ஏனெனில் இலங்கை அரசு பாதிக்கப்பட்டவர்களை தொடர்புகொள்ளாது தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை படையினர் தொடர்ந்து அச்சுறுத்திவருகின்றனர். வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழ் மக்களின் உறவினர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதுடன் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தை அவர்கள் அதற்கு பயன்படுத்திவருகின்றனர்.

அரசின் ஆதரவுடன் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. அனைத்துலக நாடுகளின் அழுத்தங்களை குறைப்பதற்கே இலங்கை அரசு ஆணைக்குழுக்களை அமைக்கின்றது. உண்மைகளை கண்டறிவதற்கு அல்ல என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version