ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 20 நாடுகளின் பாராளுமன்ற முதலாவது சர்வதேச பயிற்சி இலங்கையில்…

இலங்கைப் பாராளுமன்றம் ஆசிய பசுபிக் பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஆய்வு ஊழியர்களுக்கு மதிப்பாய்வின் மூலம் ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தின் முக்கியத்துவம் குறித்த முதலாவது சர்வதேச பயிற்சி  இலங்கையில் நடைபெற்றது.

ஆசிய பசுபிக் பிராந்தியத்திலுள்ள சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த ஐம்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஆய்வு ஊழியர்களின் பங்குபற்றலுடன் மதிப்பாய்வின் மூலம் ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தின் முக்கியத்துவம் குறித்த பயிற்சி அமர்வு மற்றும் கலந்துரையாடல்  நேற்று முன்தினம் வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டத்தொகுதியில்  நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஆய்வு ஊழியர்களின் பங்குபற்றலுடன் மதிப்பாய்வின் மூலம் ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து 2023 மார்ச் 27ஆம் திகதி முதல் மார்ச் 30ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சித் தொடரின் இறுதி அமர்வாக இது அமைந்தது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேர்தன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உலகளாவிய பாராளுமன்ற மதிப்பாய்வுகளுக்கான மன்றத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  கபீர் ஹாசிம் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசாநயக்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.