அஸர்பைஜான் – ஆர்மீனியாவுக்கு இடையே மீண்டும் போர்!

ஆர்மீனியா (Armenia) பீரங்கி தாக்குதலில் ஈடுபடுவதாக அஜர்பைஜான் (Azerbaijan) அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தது.

போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையிலும் , இந்த தாக்குதலில் ஆர்மீனியா  ஈடுபட்டுள்ளது என அஜர்பைஜான்  குற்றம் சுமத்தியுள்ளது.

நாகோர்னோ-கராபாக் பிராந்தியங்கள் தொடர்பாக, கடந்த மாதம் முதல் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வந்த நிலையில், ரஷ்யா மற்றும் துருக்கி முயற்சியில் 2 ஆவது முறையாக இரு தினங்களுக்கு முன்பு போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.

இந் நிலையில் இரு நாடுகளுக்குமிடையே மீண்டும் போர் தொடர்வதால் நட்பு நாடுகளுடன் உறவு மோசமாகும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.