அவுஸ்திரேலிய சமூகத் தடுப்பில் தமிழ் அகதி குடும்பம்: சமூகத் தடுப்பு என்றால் என்ன?

அவுஸ்திரேலிய அரசால் கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்கப்பட்டிருந்த பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பம் தற்போது அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டு சமூகத் தடுப்பில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சரி, சமூகத் தடுப்பு என்றால் என்ன?

அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பு விசா பெற காத்திருக்கும் அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் இத்தடுப்பில் வைக்கப்படுகின்றனர். இத்தடுப்பில் சம்பந்தப்பட்ட அகதி தடுப்பு முகாம் அல்லது கடல் கடந்த தடுப்பிற்கு பதிலாக பிற சுதந்திரமான நபர்களைப் போல வீட்டில் அல்லது அடுக்கமாடி குடியிருப்பில் வசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இதில் அகதிகள் வெளியே சென்று வர அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் இருக்கும் மாநிலத்தை விட்டு பிற மாநிலத்துக்கு பயணிக்கவோ அல்லது தாங்கள் விரும்பும் இடத்துக்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.