அவுஸ்திரேலியா: அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்தும்  திட்டம் விரைவில் சாத்தியம்

நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா அழைத்துவரப்பட்ட அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படுவதற்கான வாய்ப்பு எழுந்துள்ளது.

நாட்டின் புதிய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள Karen Andrews, அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்துவது தொடர்பில் அந்நாட்டுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதையடுத்து இவ்விடயம் விரைவில் சாத்தியமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தோனேசியாவின் Bintan தீவில் வைக்கப்பட்டுள்ள 400 அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்களில் 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் சூடான், சோமாலியா, ஆப்கானிஸ்தான், மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.