அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத் தமிழர்களின் நிலை.

கடந்த ஓகஸ்ட் மாதம் மனுஸ்தீவிலிருந்த முகாம் மூடப்பட்ட நிலையில், அகதிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

மனுஸ்தீவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள 25இற்கும் மேற்பட்ட அகதிகள், பப்புவா நியூகினியாவின் தலைநகரான ஃபோர்ட் மோர்ஸ்பேயில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தப் பகுதி பாதுகாப்பானது இல்லை என்றும், வெளியில் செல்லும் போது பணம், கைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை என்றும் அங்குள்ள ஈழத் தமிழ் அகதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவிற்கு படகு வழியாக வர முயற்சித்த 250இற்கும் அதிகமான அகதிகள் பப்புவா நியூகினியாவில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்களில் 46பேர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள Bomana தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், ஏனைய அனைவரும் அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுக்கு வழங்கப்படும் செலவுத் தொகைக்கான உதவி போதுமானதாக இல்லை எனக் கூறப்பட்டுள்ள அதேவேளை, அவர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பிற்கான வாடகையை அவுஸ்திரேலிய அரசு செலுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

இங்கு வசிக்கும் பல அகதிகள், தங்கள் எதிர்காலம் குறித்து கவனமெடுப்பதுடன், பாதுகாப்பான நாட்டில் குடியர்த்துமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.