Tamil News
Home உலகச் செய்திகள் அவுஸ்திரேலியாவின் நவுருத்தீவு முகாமை நிர்வகிக்க போகும் அமெரிக்க தனியார் நிறுவனம் 

அவுஸ்திரேலியாவின் நவுருத்தீவு முகாமை நிர்வகிக்க போகும் அமெரிக்க தனியார் நிறுவனம் 

அமெரிக்காவில் சிறைச்சாலைகளை நிர்வகித்து வரும் தனியார் நிறுவனத்துக்கு நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாமை நிர்வகிப்பதற்கான லாபகரமான ஒப்பந்தம் கைமாற உள்ளது.

Management and Training Corporation எனும் அந்நிறுவனம் சர்ச்சைக்குரிய கடந்த காலத்தை கொண்டுள்ள நிலையில், நவுருத்தீவு முகாமை வரும் ஒக்டோபர் 1 முதல் நடத்தயிருக்கிறது.

தி கார்டியன் ஊடகத்தின் தகவல்படி, தற்போது நவுருத்தீவு முகாமை நிர்வகித்து வரும் அவுஸ்திரேலியாவின் Canstruct நிறுவனத்தின் ஒப்பந்தம் வரும் செப்டம்பர் 30ம் திகதியுடன் முடிவடைய இருக்கிறது.

இத்தடுப்பு முகாமில் சிறைவைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்த போதிலும், இம்முகாமை நடத்துவதற்கு பெருஞ்செலவு செய்யப்பட்டு வந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ச்சியான ஒப்பந்தங்களின் மூலம் 1.82 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை Canstruct நிறுவனம் பெற்றிருக்கிறது.

கடந்த 2014ம் ஆண்டு முதல் நவுருவுக்கு புதிதாக எந்த அகதியும் அனுப்பப்படாத போதிலும் மாதந்தோறும் வழக்கமாக செலவு செய்யப்படும் 35 மில்லியன் முதல் 40 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களே இம்முகாமிற்காக அவுஸ்திரேலிய அரசு செலவு செய்திருக்கிறது. நவுருத்தீவு முகாமில் வைக்கப்பட்டிருந்த அகதிகளின் எண்ணிக்கை 1000+ யிலிருந்து சுமார் 100 ஆக குறைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அரசின் கணக்குப்படி, 2021ம் ஆண்டில் ஒரு அகதியை நவுருத்தீவில் சிறை வைத்திருப்பதற்காக ஆண்டுக்கு 4.3 மில்லியன் வுஸ்திரேலிய டொலர்கள் செலவு செய்யப்பட்டிருக்கிறது.

Exit mobile version