அரச அதிகாரிகள் மீது 80 முறைப்பாடுகள் பதிவு

அரசியல் பழிவாங்கலுக்கு இலக்கான அரச அதிகாரிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 80 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அரச நிறுவன அதிகாரிகள், அரச கூட்டுத்தாபன ஊழியர்கள், ஆயுதமேந்திய இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரால் குறித்த முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி நிறைவடைவுள்ளது.

அதன்படி, 2015 ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் இந்த ஆணைக்குழுவினால் பொறுப்பேட்கப்படவுள்ள நிலையில், முறைப்பாடுகளை பொறுப்பேட்கும் இறுதி தினத்திற்கு முன்னர் அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.