அயோத்தி ராமர் கோயிலுக்கு இலங்கை சீதா அம்மன் கோயில் கல் இந்தியாவிடம் ஒப்படைப்பு

இந்தியாவில் அமைக்கப்பட்டு வரும்  அயோத்தி ராமர் கோயிலுக்கான  கல்லொன்று இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் மிகவும் உற்று நோக்கப்பட்ட ஒரு முக்கிய வழக்கான ராமர் கோயில்இ பாபர் மசூதி நிலத்தகராறு வழக்கில் அளிக்கப்பட்ட இறுதி   தீர்ப்பில் சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த நிலத்தில்  ராமர் கோயில் கட்டப்படவுள்ளது.

இந்நிலையில்,  சீதா-எலிய கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட   கல்இ ராமர் கோயிலுக்காக இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான இலங்கை தூதர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோரிடம் இந்த கல்  உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து இலங்கை வேந்தன் இராவணனினால் கடத்தப்படும் சீதை, இலங்கையில்   அசோகவனத்தில் தங்க வைக்கப்பட்டதாக இராமாயணம் கூறுகின்றது. அசோகவனம் என கூறப்படும் இடமேஇ இலங்கையின் சீதா எலிய என தற்போது நம்பப்படுகின்றது.

இலங்கையின் நுவரெலியா நகரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் சீதா எலிய என நம்பப்படும் சீதா அம்மன் கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.