அமெரிக்க பிரபலங்களின் ருவிற்றர் கணக்குகள் முடக்கம்

அமெரிக்காவில் ஜோ பைடன், பராக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் ருவிற்றர் கணக்குகள் ஒரே சமயத்தில் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் பிட்கொயின் எனப்படும் டிஜிட்டல் கரன்சி அல்லது கிரிப்டோ கரன் என்னும் கணினி வழி பணப் பரிவர்த்தனை பிரபலம் அடைந்து வருகின்றது. இத்தகைய டிஜிட்டல் நாணயங்களுக்கென தனி மையங்கள் உலகம் முழுவதும் இயங்குகின்றன. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், தாவூத் இப்ராகிம் போன்ற பயங்கரவாதிகளும் பிட்கொயின் பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெறுவார் என நம்பப்படும் ஜோபைடன், தொழிலதிபர்கள், எலன் மக்ஸ், பில்கேட்ஸ், ஜெப் பெசேஸ், வாரன் பப்டெட் ஆகியோரின் ருவிற்றர் கணக்குகள் ஒரே நேரத்தல் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் பிட்கொயின் பரிவர்த்தனை செய்யும் கும்பல் இருப்பதாக கூறப்படுகின்றது.

இவர்களைத் தவிர முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அப்பிள், உபேர் ஆகிய நிறுவனங்களின் ருவிற்றர் கணக்குகளும் முடக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிட்கொயின் பரிவர்த்னை செய்யும் கும்பல் இவர்களின் ருவிற்றர் பக்கத்திற்குள் எப்படி புகுந்தார்கள் என்பது பற்றி விசாரணை செய்யப்பட்டு வருவதாக ருவிற்றர் நிர்வாகம் தெரிவித்துள்ளது