Tamil News
Home உலகச் செய்திகள் அமெரிக்க – தலிபான் ஒப்பந்தத்தின் பின்னர் 10,708 இராணுவ வீரர்கள் பலி ஆப்கானிஸ்தான் அதிபர்

அமெரிக்க – தலிபான் ஒப்பந்தத்தின் பின்னர் 10,708 இராணுவ வீரர்கள் பலி ஆப்கானிஸ்தான் அதிபர்

அமெரிக்க – தலிபான் ஒப்பந்தம் தொடங்கியதிலிருந்து இதுவரை 10,708 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில், அமெரிக்க – தலிபான்களிடையே அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் தொடங்கிய நாளிலிருந்து 10,708 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். 6,781 பேர் காயமடைந்துள்ளனர். பலர் கடத்தப்பட்டுள்ளனர்.  இதேவேளை 775 பொது மக்கள் 1,609 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இறப்பு விகிதம் இந்த வருடத்தின் முதல் பகுதியில் 13%ஆகக் குறைந்துள்ளது. அத்துடன் வன்முறைச் சம்பவங்களும் குறைந்துள்ளதாக ஐ. நா. சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்களிடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் கானி சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்குமிடையே மோதல் வலுத்து வருகின்றது.

இதேவேளை அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001 செப்டெம்பர் 01ஆம் திகதி  நியூயோர்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு தகர்த்தனர். அதன் பின்னர் ஏற்பட்ட மோதலில் இதுவரை 2,400 அமெரிக்க படையினர் பலியாகியுள்ளனர். 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கான் இராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுகு்கு இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க சமாதான உடன்படிக்கை டோகாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version