Tamil News
Home செய்திகள் அமெரிக்க எழுகதமிழில் சிவாஜிலிங்கம் சிறப்புரை ! அணிதிரள அழைப்பு !!

அமெரிக்க எழுகதமிழில் சிவாஜிலிங்கம் சிறப்புரை ! அணிதிரள அழைப்பு !!

யாழ் முற்றவெளியில் இடம்பெறும் எழுகதமிழ் எழுச்சி நிகழ்விற்கு சமாந்திரமாக, அமெரிக்காவில் இடம்பெறுகின்ற எழுகதமிழ் எழுச்சி நிகழ்வில் வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், டொரோ பிரதிநிதியுமாகிய சிவாஜலிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்ற இருக்கின்றார் என அறிவிக்கப்பட்டள்ளது.

நியு யோர்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபை முன்றலில் இவ் எழுச்சி நிகழ்வு மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இடம்பெறுகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் வட அமெரிக்காவின் பல்வேறு தமிழர் அமைப்புக்களும் எழுகதமிழ் நிகழ்வினை முன்னெடுத்துள்ளன.

இதேவேளை, கனடாவில் இருந்து எழுகதமிழ் நிகழ்வில் பங்கெடுப்பதற்கான போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version