அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ட்ரம்ப், ஜோ பிடன் வென்ற மாநிலங்கள்

சர்வதேச மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றது. முடிவுகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி ஜோ பிடன் 129 தொகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருக்கின்றார். ட்ரம்ப் அவர்கள் 108 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்று பின்தங்கியுள்ளார்.

வேறும் பெரும்பாலான மாநிலங்களில் ஜோ பிடனின் கை ஓங்கியிருக்கிறது. இந்திய நேரம் காலை 10.30 இன்படி ஜோ பைடன் 223 தொகுதிகளிலும், ட்ரம்ப் 166 தொகுதிகளிலும் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர். ஆனால் பிரதிநிதிகள் அதிகம் உள்ள முக்கியமான மாநிலங்களில் ட்ரம்ப் முன்னிலை வகிக்கின்றார்.

இதுவரை கிடைத்த வாக்குகள் மாநிலங்கள் ரீதியாக

ட்ரம்ப் முன்னிலையில் இருக்கும் மாநிலங்கள்:

அலாஸ்கா, அர்கன்சாஸ், கான்சாஸ், கென்டக்கி, லூயிசியானா, மிசிசிப்பி, நெப்ராஸ்கா, வடக்கு டகோட்டா, ஒக்லஹாமா, தெற்கு டகோட்டா, டென்னிசி, மேற்கு வேர்ஜினியா, வியாமிங், இன்டியானா, தெற்கு கரோலினா, உட்டா ஆகிய மாநிலங்களில் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கின்றார்.

 

ஜோ பிடன் முன்னிலையில் இருக்கும் மாநிலங்கள்:

கொலராடோ, கொலம்பியா, கனெக்டிகட், டெலாவர், இல்லினாய்ஸ், மேரிலேன்ட், மாசாசூசெட்ஸ், நியூ ஹாம்ஷயர், நியூஜெர்சி, நியூ மெக்சிக்கோ, நியூயோர்க், ரோட் தீவு, வெர்மானட், வேர்ஜினியா, வோஷிங்டன், ஓரேகான், கலிபோர்னியா ஆகிய மாநிலங்களில் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார்.

டெக்சாஸ் மாநிலத்தில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே சிறிய அளவிலேயே வித்தியாசம் இருந்தது. இரு கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாக்களிக்கும் மக்கள் அதிகம் கொண்ட மாநிலங்களில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகின்றது. இந்த மநிலங்கள் தேர்தல் முடிவின் போக்கை மாற்றும் எனக் கருதப்படுகின்றது.

குறிப்பாக புளோரிடா, வட கரோலினா, ஜோர்ஜியா, டெக்சாஸ் மற்றும் அரிசோனா ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவு இரு போட்டியாளர்களுக்கும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.