Tamil News
Home செய்திகள் அமெரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்த 6 மில்லியன் டொலர்களை செலவிட்ட சிறீலங்கா

அமெரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்த 6 மில்லியன் டொலர்களை செலவிட்ட சிறீலங்கா

சிறீலங்காவுக்கு ஆதரவான நிலை ஒன்றை அமெரிக்காவில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்காவின் தொழிலதிபர் ஒருவருக்கு 6.5 மில்லியன் டொலர்களை சிறீலங்கா அரசு வழங்கியது தற்போது தெரியவந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு சிறீலங்காவின் மத்திய வங்கி ஊடாக இந்த பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சிறீலங்காவினால் இந்த பணிக்கு அமர்த்தப்பட்ட இமாட் சூபேரி என்ற தொழிலதிபர் ஒரு புலனாய்வு அதிகாரி அதிகாரியாவார்.

தற்போது அமெரிக்காவின் நீதி மன்ற விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இந்த அதிகாரி புதிய நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன் ஊடாகவே சிறீலங்காவில் இருந்து பணத்தை பெற்றதாகவும், அதில் பெரும்பகுதியை அவரும் அவரின் மனைவியும் செலவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version