அமெரிக்கத் தேர்தலில் ஜோ பிடனுக்கு வாக்களித்த 69 % அமெரிக்க முஸ்லிம்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு 69 சதவீத அமெரிக்க முஸ்லிம்கள் வாக்களித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலின் பின்னர் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. வாக்குகள் எண்ணப்பட்டு வரும் வேளையில் முடிவுகளும் வெளியாகிய வண்ணம் உள்ளன. தேர்தலுக்குப் பின்னரான கருத்துக்கணிப்பின்படி அமெரிக்க இஸ்லாமிய சபையினர் நடத்திய ஆய்வில், அமெரிக்காவில் உள்ள 84 சதவீத முஸ்லிம் குடும்ப வாக்களர்கள் வாக்களித்துள்ளனர். அதில் 69 சதவீதமானவர்கள் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடனுக்கும், 17 சதவீதத்தினர் அதிபர் ட்ரம்ப்பிற்கும் வாக்களித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இருப்பினும் கடந்த தேர்தலைவிட தற்போது முஸ்லிம்களின் வாக்குகளை ட்ரம்ப் அதிகம் பெற்றுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் 13 சதவீத முஸ்லிம்களின் வாக்குகளை மட்டுமே ட்ரம்ப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.