Home செய்திகள் அதிக வெப்பமான காலநிலையிலும் தமது பிள்ளைகளைத் தேடி தாய்மார் வீதியில் கவனயீர்ப்பு போராட்டம்.

அதிக வெப்பமான காலநிலையிலும் தமது பிள்ளைகளைத் தேடி தாய்மார் வீதியில் கவனயீர்ப்பு போராட்டம்.

நாட்டில் தற்போது நிலவிவரும் அதி வெப்பநிலையில் குழந்தைகள் முதயவர்களை வெய்யிலில் செல்லவேண்டாம் என்று சுகாதார திணைக்களம் செய்திகள் வெளியிட்டு வரும் நிலையிலும் தமது உறவுகளைத் வலிந்து தொலைத்த பெண்கள் முதியவர்கள், தாய்மாரென அனைவரும் வீதியில் இறங்கி போராடும் நிலையே தாயகத்தில் தொடர்கினது.

இந் நிலையில்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.
சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து சர்வதேச விசாரணையை கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்தமையின் வெளிப்பாடாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது தலைகளில் கருப்பு பட்டிகளை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் ,எங்கே எங்கே உறவுகள் எங்கே ,இலங்கை அரசே பதில் சொல் ,சர்வதேசமே நீதியை பெற்றுத்தா உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.

கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே?,சர்வதேசத்தில் மகளிர் கொண்டாட்டம் எங்களிற்கு கண்ணீர் போராட்டம் , சர்வதேசமே இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் ஏற்று ,இலங்கையின் ஜனநாயகம் தமிழின அழிப்பிலா?, கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராடடத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கின் 8 மாவட்ட்ங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் நலன் விரும்பிகள் வர்த்தக சங்கத்தினர் முச்சக்கர வண்டி சங்கத்தினர் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

d 1 அதிக வெப்பமான காலநிலையிலும் தமது பிள்ளைகளைத் தேடி தாய்மார் வீதியில் கவனயீர்ப்பு போராட்டம்.

Exit mobile version