அணிசேரா நாடுகளில் இருந்து விலகுகின்றதா இந்தியா

இந்தியா தனது அணிசேரா வெளியுறவுக் கொள்கைகளில் இருந்து அமெரிக்காவின் சீரமைக்கப்பட்ட கொள்கையுடன் சேர்ந்துள்ளதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்தியாவின் இந்தக் கொள் மாற்றம் இலங்கை உட்பட பல தென்னாசிய நாடுகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகின்றது.

இந்தியாவின் அணிசேராக் கொள்கையை மேற்கத்திய நாடுகளும் யப்பானும் முன்னர் விரும்பவில்லை. ஆனால் சோவியத் ஒன்றியத்தின் சரிவுடன் சோவித்துக்கு ஆதரவான இந்தியாவின் கொள்கைகளில் மாற்றம் தென்பட்டது. அணுசக்தி பரவல் தடை உடன்பாட்டுக்கு இந்தியா உடன்படாததால் அமெரிக்கா முன்னர் இந்தியாவுக்கான உதவியை நிறுத்தியிருந்தது.

ஆனால் சீனாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்காவுக்கு இந்தியாவின் உதவி தேவைப்பட்டது. சீனாவுக்கு இணையான பொருளாதார அளவைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கின்றது.

அமெரிக்காவுக்கு நெருக்கமாக இந்தியா நகர்ந்தாலும் இந்தியா தனது சுயாதீனமாக முடிவெடுக்கும் தகுதியை இழக்காது என்ற உறுதிமொழிகளை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கியது. இந்தோ – அமெரிக்கா உறவு தற்போது பாதுகாப்பு, பொருளாதார உடன்பாடுகளில் பிணைந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அணிசேரா நாடுகளின் மாநாட்டில் அதிக அக்கறைகளைக் தற்போது காண்பிப்பதில்லை.

2016 ஆம் ஆண்டு வெனிசுலாவில் இடம்பெற்ற மாநாட்டை புறக்கணித்த மோடி இந்த வருடம் ஆர்ஜபைஜானில் நடைபெற்ற மாநாட்டையும் புறக்கணித்துள்ளார். அதாவது ஏழை நாடுகளில் உறுப்பினராக இருப்பதை இந்தியா விரும்பவில்லை. இந்த மாநாடுகளில் தாம் கலந்துகொண்டால் இந்திய – அமெரிக்க உறவுகள் பாதிக்கப்படலாம் என மோடி கருதியிருக்கலாம்.

அணிசேரா நாடுகளின் முக்கிய கூட்டத்தை தவிர்த்த மோடி குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த மேற்குல இராஜதந்திரிகளின் கூட்டங்களில் கலந்துகொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.