Tamil News
Home உலகச் செய்திகள் அடுத்த கட்டத்துக்கு நகரும் விவசாயிகள் போராட்டம் – முக்கிய தகவல்கள்

அடுத்த கட்டத்துக்கு நகரும் விவசாயிகள் போராட்டம் – முக்கிய தகவல்கள்

இன்றைய முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளும் அரசியல் கட்சிகள், தங்கள் கொடிகளை வீட்டில் விட்டு, போராட்டத்திற்கு வாருங்கள் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

*இந்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் மசோதாக்கள், விவசாயப் பொருட்களின் விற்பனை, விலை மற்றும் சேமிப்பு போன்றவைகள் தொடர்பான விதிகளை தளர்த்துகிறது.

*இந்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, இந்திய விவசாயிகள் அழைப்பு விடுத்த பாரத் பந்த் என்னும் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்படுகின்றது.

*புதிய வேளான் மசோதாக்கள், தனியார் விவசாயப் பொருட்களை வாங்கிக் குவித்து வைக்கவும், எதிர்காலத்தில் விற்பனை செய்யவும் அனுமதிக்கிறது. இதை அரசு அனுமதித்து இருக்கும் முகவர்கள் மட்டுமே இதற்கு முன்பு செய்ய முடியும்.

*புதிய வேளான் மசோதாக்கள், விவசாயத் துறையில் தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க அனுமதிக்கும். இது விவசாயிகளின் வருமானத்தை பாதிக்காது என ஆளும் பாஜக தரப்பில் கூறுகிறார்கள்.

*விவசாயிகள் பாஜக தரப்பில் கூறப்பட்ட விளக்கங்களில் திருப்தி அடையவில்லை.

*விவசாயிகள் போராட்டக் குழவினருக்கும் அரசுக்கும் இடையே நடந்த 5 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

*விவசாயிளுக்கு பாதகமாக அமையும் குறித்த மூன்று புதிய விவசாய சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த 12 நாட்களாக போராட்டம் நடத்திவருகிறார்கள்.

*விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சிலர் தற்போது கைதாகி உள்ளனர்.

*டெல்லியின் எல்லைகளில் போராட்டங்கள் தொடங்கி பத்து நாட்கள் ஆகும் நிலையில், போராட்டத்தில் பங்கேற்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

*விவசாயிகளின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் நடிகை பிரியங்கா சோப்ரா வலியுத்தல்

*இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, இந்திய விவசாயிகள் அழைப்பு விடுத்த பாரத் பந்த் என்னும் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் இன்று நடக்கிறது.

*விவசாயிகளின் வேலை நிறுத்த அறிவிப்புக்கு குறைந்தபட்சம், 15 எதிர்கட்சிகள் தங்கள் ஆதரவை வழங்கி இருக்கின்றன.

*தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி வந்து சேர்ந்தார், ஆனால் அவரை போராட்டத்தில் கலந்துகொள்ளவிடாமல் பொலிஸார் தடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

*டெல்லியில் நடக்கும் விவசாயகளின் போராட்டங்களுகளை ஆதரித்து பத்மஸ்ரீ விருது பெற்ற பஞ்சாபி கவிஞர் சுர்ஜித் பர்டெர் தன்னுடைய விருதை மத்திய அரசுக்கு திரும்ப அளித்துள்ளார்.

*உலகம் போராட்டத்தைக் பார்த்துக்கொண்டிருக்கிறது. கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பஞ்சாபியர்களும் இந்தியர்களும் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

*விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் 27 இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் பொலிஸார் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

 

Exit mobile version