அடா­வ­டித்­த­னங்­களை அரங்­கேற்­றி­ய­வர்கள், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும்

முல்­லைத்­தீவு, நீரா­வி­யடி, பிள்­ளையார் ஆலய வளா­கத்தில் பௌத்த பிக்­குவின் பூத­வு­டலை தகனம் செய்த சம்­ப­வ­மா­னது தமிழ் மக்­களைக் குறிப்­பாக இந்து மத சகோ­த­ரர்­களை மிக­மோ­ச­மாக அவ­மா­னப்­ப­டுத்தும் செய­லாக அமைந்­துள்­ளமை எம்­மை­யெல்லாம் பெரும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது , இந்த அடா­வ­டித்­த­னங்­களை அரங்­கேற்­றி­ய­வர்கள், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும்.

அப்போதுதான் நீதித்துறையின் சுதந்திரமும், பக்கச்சார்பற்ற தன்மையும் பாதுகாக்கப்படும் என வலியுறுத்திக் கூறுகின்றோம் என்று யாழ். மறை­மா­வட்ட கத்­தோ­லிக்க நீதி சமா­தான ஆணைக்­குழு கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.

இச்­சம்­பவம் குறித்து ஆணைக்­கு­ழுவின் தலைவர் எஸ்.வி.பி.மங்­க­ள­ராஜா அடி­களார் நேற்று புதன்­கி­ழமை வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

முன்னர் ஒரு­ த­டவை நீதி­மன்ற அவ­ம­திப்புக் குற்­றத்­திற்­காக சிறைத்­தண்­டனை பெற்று தண்­ட­னைக்­காலம் முடி­யமுன் ஜனா­தி­ப­தியின் விசேட மன்­னிப்பில் வெளி­யே­றிய ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வி­னரின் இன்­னு­மொரு நீதி­மன்ற அவ­ம­திப்பும் இடம்­பெற்­றுள்­ளது.

இந்து மக்­க­ளு­டைய ஆலய வளா­கத்­தி­லுள்ள தீர்த்­தக்­கே­ணியின் அரு­கா­மையில் காலஞ்­சென்ற பௌத்த பிக்­குவின் பூத­வுடல் தகனம் செய்­யப்­பட்­ட­மையும், நீதி­மன்றத் தீர்ப்­புக்­களை தொடக்­கத்­தி­லி­ருந்தே தொடர்ச்­சி­யாக மீறும் சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.

அத்­துடன் இது ஒரு பௌத்த நாடு, தாம் எங்கு வேண்­டு­மா­னாலும் தங்கள் இறந்த பிக்­கு­களைத் தகனம் செய்­யலாம் என்­ப­த­னையும் நீதி­மன்ற தீர்ப்பு தம்மைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என்ற கோட்­பாட்­டையும் ஏற்றுக் கொள்ள முடி­யாது.

நீதி­மன்றத் தீர்ப்பை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வதை உறு­தி­செய்ய வேண்­டிய பொலிஸார் அதனை உதா­சீனம் செய்­ப­வர்­க­ளுக்குப் பாது­காப்பும் அத்­துடன் சட்­டத்­திற்கு விரோ­த­மான செயற்­பாடு அரங்­கே­று­கையில் அதற்கு பாது­காப்பு வழங்­கி­ய­மை­யையும், நீதி­மன்றத் தீர்ப்பை விளக்கி எடுத்துச் சொல்ல முயன்ற சட்­டத்­த­ர­ணி­க­ளையும் அவர்­க­ளோடு வந்­த­வர்­க­ளையும் தாக்கிக் காயப்­ப­டுத்­தி­ய­மை­யையும் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம்.

இந்த அடா­வ­டித்­த­னங்­களை அரங்­கேற்­றி­ய­வர்கள், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும். அப்போதுதான் நீதித்துறையின் சுதந்திரமும், பக்கச்சார்பற்ற தன்மையும் பாதுகாக்கப்படும் என வலியுறுத்திக் கூறுகின்றோம் என்றும் தெரிவிக்கப்­பட்டுள்ளது.