Tamil News
Home செய்திகள் அங்கையனின் அறிவிப்பினால் டக்ளஸ் கடும் சீற்றம்; ஜனாதிபதி, பிரதமரிடம் முறைப்பாடு

அங்கையனின் அறிவிப்பினால் டக்ளஸ் கடும் சீற்றம்; ஜனாதிபதி, பிரதமரிடம் முறைப்பாடு

எந்தவொரு அமைச்சரின் ஊடாகவும் யாழ். மாவட்டத்தில் எனக்குத் தெரியாது செயல் திட்டம் எதனையும் நடைமுறைப்படுத்தக் கூடாது என அங்கயன் இராமநாதன் எம்.பி. யாழ். மாவட்டச் செயலாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்தினால் சீற்றமுற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அக்கடிதத்தை விரைந்து வார்த்தைக்கு வார்த்தை சிங்களத்தில் மொழி பெயர்த்து, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கின்றார் என அறியவருகின்றது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரான அங்கஜன் இராமநாதனால் 2020-08-18 திகதியிடப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரான கணபதிப்பிள்ளை மகேசனிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதமே அமைச்சரை சினம்கொள்ள வைத்து இவ்வாறு மொழி பெயர்ப்புடன் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு அந்த விடயத்தை அவசரமாக அனுப்பி வைக்கச் செய்துள்ளது.

அந்தக் கடிதத்தில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தபின்னர் வந்த திட்டம் அனைத்தும் மக்கள் மயப்படுத்தப்படும்போது தனது தலைமையின் கீழ் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்து இதனை சகல பிரதேச செயலாளருக்கும் அறிவிப்பதோடு திட்டங்களின் விவரங்களையும் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா கிளப்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version