Tamil News
Home உலகச் செய்திகள் ஹொங்கொங் போராட்டங்களில் முகமூடி அணியத் தடை

ஹொங்கொங் போராட்டங்களில் முகமூடி அணியத் தடை

ஹொங்கொங் போராட்டங்களில் போராட்டக்காரர்கள் முகமூடி அணியத் தடை விதித்ததை எதிர்த்து அரசிற்கு எதிராக மக்கள் மேற்கொண்ட பேரணி வன்முறையில் முடிந்தது.

அரசு அலுவலகங்கள், மெட்ரோ ரயில் நிலையம், சீனாவுடனான வணிகத் தொடர்புகள் வைத்திருக்கும் அலுவலகங்கள் ஆகியவற்றின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் தொடுத்தனர்.

போராட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். இதில் பலர் காயமடைந்தனர்.

போராட்டக்காரர்கள் அணிந்திருந்த முகமூடிகளைக் கழற்றி அவர்களைக் கைது செய்தனர்.

மழையையும் பொருட்படுத்தாமல் இலட்சக் கணக்கானோர் இந்த பேரணியில் முகமூடி அணிந்து கலந்து கொண்டனர்.

போராட்டக்காரர்கள் முகமூடி அணிய நீதிமன்றமும் தடை விதித்திருந்தது. ஹொங்கொங்கில் போராட்டங்களில் முகமூடி அணியத் தடை விதித்ததை எதிர்த்து அரசிற்கு எதிராக மக்கள் மேற்கொண்ட பேரணி வன்முறையில் முடிந்துள்ளது.

முகங்களை முழுவதுமாக மூடும் முகமூடிகளுக்கு தடை விதிக்கும் அவசர நிலை சட்டத்தை எதிர்த்து அயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

“ஹொங்கொங் எதிர்க்கும்” என்று கோஷம் எழுப்பியவாறு ஹொங்கொங்கின் மையப் பகுதிக்கு முகமூடி அணிந்து மக்கள் அமைதியாகச் சென்றனர்.

போராட்டங்களில் நிஜத் துப்பாக்கி குண்டுகள் பயன்படுத்தப்படுவதை எதிர்த்தும் இந்தப் பேரணி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் உண்மையான குண்டுகளைப் பயன்படுத்தியதால் இரண்டு பேர் காயமடைந்தனர்.

பேரணியைத் தடுக்க பொலிசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

போராட்டம் வெடிக்குமென எதிர்பார்த்த வணிகர்கள் அந்தப் பகுதியிலிருந்த கடைகளை அடைத்திருந்தனர்.

 

 

Exit mobile version