லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் அடுத்த தலைவராக ஹஷேம் சஃபிதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். சஃபிதீன் சுமார் 32 ஆண்டுகள் ஹிஸ்புல்லாக்களின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவின் உறவினராவார்.
நஸ்ரல்லாவைப் போலவே இருக்கும் சஃபிதீன் ஹிஸ்புல்லா இயக்கத்தில் ஆரம்பம் முதலே இணைந்து செயற்பட்டு வந்துள்ளார்.
இதேவேளை ஹிஸ்புல்லா இயக்கத்தின் நிர்வாக சபையின் தலைவராகவும் சஃபிதீன் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.