ஸ்ரீலங்காவில் குழந்தை பிரசவித்த ஆண்? மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

238 Views

மாத்தறையில் வயிற்று வலி என்று கூறி சென்றவர் ஆண் குழந்தை பிரசவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு வயிற்று வலியென்று சென்றவர், தன்னை ஆண் என்றும் அவர் அடையாளப்படுத்தியே மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் பெண் என அடையாளம் கண்டுகொண்ட மருத்துவர்கள் அவரை பிரசவ விடுதிக்கு அனுப்பியதாகவும் இதன்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று காலை தனது அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் சகிதம் மாத்தறை வைத்தியசாலைக்கு சென்ற ஆணொருவர் தனக்கு வயிற்றில் வலி இருப்பதாக தெரிவித்ததையடுத்து மருத்துவர்களால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வயிற்றுவலி அதிகமானதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஆண் போல நடித்த பெண் என்பதை கண்டறிந்து அவரை பிரசவ விடுதிக்கு அனுப்பினர்.

இதனையடுத்து ஆண்குழந்தை ஒன்று அவருக்கு பிறந்துள்ளது.

26 வயதுடைய தெவிநுவர பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு ஆண் போல வேடமிட்டு வந்தவரென்றும் நீண்ட நாட்களாக இவர் அப்பகுதியில் முச்சக்கரவண்டிச் சாரதியாக தொழில் செய்து வந்தவரென்றும் தெரியவந்துள்ளது.

Leave a Reply