ஸ்பெய்னில் அவசரநிலை பிரகடனம்?

370 Views

கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் ஸ்பெயின் அரசு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ் (Pedro Sánchez) அறிவித்துள்ளார்.

பிரதமர் பெட்ரோ சான்சேஸ் வெளியிட்ட அறிவிப்பில்,

“அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பிராந்தியங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

15 நாட்களுக்கு மாத்திரம் அமுல்படுத்தப்படவிருந்த குறித்த கட்டுப்பாடுகளை 6 மாதங்கள் வரை நீடிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அனுமதி பெறவுள்ளது” என்றுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்று பரவியதை அடுத்து ஸ்பெயினில் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் தொற்று பரவுவதால் தற்போது கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

ஸ்பெய்னில் இதுவரை 11 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 35000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply