ஷேக் ஹசீனா அமைதியாக இருக்க வேண்டும்: வங்கதேச தலைமை ஆலோசகர்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு கோரும் வரை அவர் அங்கே அமைதியாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள முகம்மது யூனுஸ், “முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் இருந்து கொண்டு அரசியல் கருத்துகளை வெளியிடுவது, இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவை பாதிக்கும். ஷேக் ஹசீனாவை, வங்கதேசத்துக்கு நாடு கடத்தக் கோரும் வரை, அவரை தங்கள் நாட்டில் வைத்துக்கொள்ள இந்தியா விரும்பினால், இரு நாடுகளுக்கும் இடையே அசவுகரியம் ஏற்படாமல் இருக்க அவர் அமைதியாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.