வைரஸ் கிருமிகள் ஏனைய நாடுகளுக்கும் பரவலாம் – சீனா எச்சரிக்கை

சீனாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனாவைரல் எனப்படும் வைரஸ் கிருமிகள் ஏனைய நாடுகளுக்கும் பரவி மேலும் புதிய வைரஸ் கிருமிகளை உருவாக்கலாம் என்று சீனா அதிகரிகள் இன்று (22) தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் கிருமிகளின் தாக்கத்தால் இதுவரை 9 பேர் மரணமடைந்தும், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுமுள்ளனர்.

2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சீனாவில் பரவிய சார்ஸ் எனப்படும் வைரஸ் கிருமிகளின் தாக்கத்தால் சீனா மற்றும் கொங்கொங் நாடுகளில் 650 பேர் மரணமடைந்திருந்ததுடன், பெருமளவானோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மனிதர்களின் சுவாசத் தொகுதியை இந்த புதிய வைரஸ் கிருமிகள் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றும் தன்மை கொண்டது என சீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கிருமிகளின் தாக்கம் அமெரிக்கா, தாய்வான், தாய்லாந்து, தென்கொரியா மற்றும் யப்பான் ஆகிய நாடுகளிலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்றுநோய் தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் இன்று அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.