வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கத் தயார் – மத்திய அரசு உறுதி

151 Views

புதிய வேளாண் சட்டங்களை 18 மாதங் களுக்கு நிறுத்திவைக்க தயாராக இருப்ப தாக 10 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையில்   மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 10ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல், சோம் பர்காஷ் ஆகியோர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன் போது புதிய வேளாண் சட்டங்களை 12 முதல் 18 மாதங்கள் வரை நிறுத்திவைக்க அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் கள் உறுதி அளித்தனர். இதை ஏற்காத விவசாயிகள், 3 வேளாண் சட்டங்களை இரத்து செய்வது மட்டுமே இதற்கு தீர்வாக அமையும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதனால், 10-வது சுற்று பேச்சுவார்த் தையும்   முடிவு எட்டப்படாமலேயே நிறைவடைந்தது. இதையடுத்து, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை   நடக்கும் என மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply