வேகமாக அதிகரிக்கும் தொற்று – வடக்கில் மேலும் 37 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 37 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 778 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 பேருக்கும், முல்லலைத்தீவு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 4 பேருக்கும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 2 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 பேருக்கும், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் (அவர்களில் ஒருவர் நெல்லியடி வெதுப்பக பணியாளர்), யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 22 பேருக்கும், பருத்தித்துறை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.