அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது Tamil News
Home செய்திகள் வெளிநாட்டவர்கள் இலங்கையில் 100 குழந்தைகளை மாத்திரம் தத்தெடுக்க அனுமதி!

வெளிநாட்டவர்கள் இலங்கையில் 100 குழந்தைகளை மாத்திரம் தத்தெடுக்க அனுமதி!

07. 2025ஆம் ஆண்டில் வெளிநாட்டு தத்தெடுப்புகளை 100 ஆகக் கட்டுப்படுத்தும் வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான குழந்தைகள் தத்தெடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கான தத்தெடுப்பு உத்தரவுகளின் எண்ணிக்கையை 100 ஆகக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த வர்த்தமானி வெலியாகியுள்ளது.

கட்டளைச் சட்டத்தின் 1ஆவது பிரிவின்படி, இந்த தத்தெடுப்பு உத்தரவுகள் இலங்கைப் பிரஜைகளாக இல்லாத, இலங்கையில் வசிக்காத நபர்களுக்குப் பொருந்தும்.
இந்த திட்டம் இலங்கையில் உள்ள குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் வெளிநாட்டு நபர்களுக்கு பொருந்துகிறது.

இலங்கையில் வெளிநாட்டினரால் குழந்தைகளை தத்தெடுப்பது குழந்தைகள் தத்தெடுப்பு கட்டளைச் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது

குழந்தையின் நலன் மற்றும் தத்தெடுக்கும் நடவடிக்கை என்பன இலங்கை சட்டங்களுடன் இணங்குவதை உறுதி செய்வதற்காக ஒரு நீண்ட கட்டமைக்கப்பட்ட சட்ட செயல்முறையை உள்ளடக்கும் வகையில் குறித்த வர்த்தமானி தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் வெளிநாட்டு விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கின்றனர்.

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவரும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டிலும் அனுமதிக்கக்கூடிய அதிகபட்ச தத்தெடுப்புகளின் எண்ணிக்கை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரால் வர்த்தமானியில் வெளியிடப்படும்.
மேலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அத்தகைய உச்சவரம்பு குறித்து அறிவிக்கப்படும்.
இந்தநிலையிலேயே இந்த ஆண்டுக்கான வர்த்தமானி அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

Exit mobile version