வெளிநாட்டவர்கள் இந்நாட்டில் ஈழ அரசு உருவாக தேவையான சட்டங்களை அரசு இயற்றுகிறது – சம்பிக்க

389 Views

எமது நாடு துரதிஷ்டவசமான நிலையில் இருக்கின்ற இக்காலக்கட்டத்தில், வெளிநாட்ட வர்களுக்கு இந்நாட்டில் ஈழ அரசு உருவாவதற்குத் தேவையான சட்டங்களை இயற்றிக்கொள்வதற் காக அரசாங்கம் நாடாளுமன்றத்தை கூட்டி யுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அரசாங்கம் மீது குற்றஞ்சாடினார்.

யுத்த வெற்றிக்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் நிகழ் வொன்று கடந்த செவ்வாய்க்கிழமை பொரளையில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில் –

“கொவிட் 19 அச்சுறுத்தலால் நாடு முடக்கப்படவேண்டிய சூழலில், நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுத்து, நாட்டின் ஒற்றுமைக்குத் துரோகம் இழைத்துவிட்டு வெளிநாட்டு அரசு ஒன்றை உருவாக்குவதற்கான சட்டத்தை இயற்றிக்கொள்வதற்காக அரசாங்கம் அடுத்த மூன்று நாள்களும் செயற்படவுள்ளது.

தனித் தனியாக சட்டம் இயற்றிக்கொண்டு, தனியான வரியை வசூலித்துக்கொண்டு, வெளிநாட்ட வர்களுக்குச்சொந்தமான தமிழீழ அரசை உருவாக்குவதற்கான வழிவகைகளை அரசாங்கம் செய்து வருகிறது” என்றார்.

நாங்கள் தமிழீழத்துக்கு எதிரானவர்கள், அதைப்போலவே, வெளிநாட்டவர்களின் ஈழம் ஒன்று தோன்றுவதற்கும் நாங்கள் எதிரானவர்கள். நமது நாடு எதிர்காலத்தில் போருக்கான மத்திய நிலையமாக மாற்றமாகலாம். உலக சக்திகளிடம் அகப்பட்டு பாரிய அழிவைச் சந்திக்க நேரிடலாம். உலக வல்லரசுகளின் பிரச்சினைகளுக்கு இலங்கை தலையிடும் வகையிலும், வெளிநாட்டு விமான செயற்பாடுகளுக்கு, வெளிநாட்டு கடற் படை விவகாரங்களுக்கு, வெளிநாட்டு பணம் இலங்கையில் வைப்பிலிடச் செய்யவும், வெளி நாட்டவர்களுக்குச் சொந்தமான காலணித்துவமாக துறைமுக நகரை நாட்டில் நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply