வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவித்தலில்,  இலங்கையர்கள், இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள், சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் என நாட்டிற்கு வருகை தரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். .

உடன் அமுலுக்குவரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறை, எதிர்வரும் 31ம் திகதி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையிலிருந்து ஐந்து நாடுகளுக்கான பயணிகள் விமான சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த துபாய் மற்றும் ஷார்ஜா, சிங்கப்பூர், இத்தாலி, பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் 05/12 இன்று   முதல் நிறுத்தப்படும் என்று கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலங்கைக்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.