வெளிநாடுகளிலிருந்து திரும்பி தலைமறைவானவர்களுக்கு இறுதி எச்சரிக்கை

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பி கொரோனா தொற்று சோதனைக்கு முகம் கொடுக்காது தலைமறைவாக இருக்கும் நபர்களுக்கு அரசாங்கம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று(24)  நள்ளிரவு 12 மணிக்குள் அருகிலுள்ள பொலிஸ் நிலையம், அல்லது வைத்தியசாலையில் தங்களை பதிவு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், பதிவு செய்யத் தவறியவர்கள் தொற்று நோய் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில் தங்க வைக்கப்படுவார்கள் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பொது மக்கள் கூடும் பகுதிகளில் யாழ். பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இதனிடையே, இன்று (25) காலை 8 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் பணி, பொது மக்கள் கூடும் இடங்களில் நடைபெற்றுள்ளது.

இந்தப் பணியில் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், மாநகர சுகாதாரப் பரிசோதகர்கள், யாழ். பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் கூடும் இடங்களில் தொற்று நீக்கி விசிறப்பட்டு வருகின்றது.