Home செய்திகள் வீதி அபிவிருத்திக்காக போராடும் தமிழ் மக்கள் – சிங்கள தேசமே அபிவிருத்தி செய்யப்படுகின்றது

வீதி அபிவிருத்திக்காக போராடும் தமிழ் மக்கள் – சிங்கள தேசமே அபிவிருத்தி செய்யப்படுகின்றது

மட்டக்களப்பு கிரான் குடும்பி மலை வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு கோரி பிரதேச மக்கள் குறித்த வீதியில் நின்று இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் இஅரச திணைக்களங்கள் இயங்கவில்லை. கடமைக்கு சமூகமளித்த அரச உத்தியோகஸ்த்தர்கள் சுகவீன விடுமுறையில் வீடு திரும்பி சென்றனர்.

வீதியினை வழிமறித்து காலை 6.30 மணி தொடக்கம் மதியம் 12.மணிவரை நடைபெற்ற சுமார் 6 மணித்தியாலம் இடம்பெற்ற போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

இதனால் பயணிகள் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கியிருந்தனர்.வீதியால் சென்ற வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டது.

“வேண்டும் வேண்டும் பாதை வேண்டும்”எமது பாதைக்கு முடிவு கிடைக்கு வரைக்கும் போராட்டம் நீடிக்கும்”போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்” என்பன போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ் வீதியானது நீண்டகாலமாக சேதமடைந்து காணப்படுவதாகவும் குன்றும் குழியுமாக காணப்படுவதனால் போக்குவரத்து செய்ய உகந்த பாதையாக இது காணப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மழைக்காலங்களில் வெள்ள நீர் இவ் வீதியின் ஊடாக பாய்ந்து ஓடுவதனால் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

Kudumpimalai 3 வீதி அபிவிருத்திக்காக போராடும் தமிழ் மக்கள் - சிங்கள தேசமே அபிவிருத்தி செய்யப்படுகின்றதுஇப்பிரதேசத்தில் உள்ள 4000 குடும்பங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இப்பிரதேசத்தில் விவசாய செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பண்ணையாளர்கள் பல கிராமங்களை சேர்ந்தவர்களும் பயன்படுத்தும் ஒரேயொரு பிரதான பாதையாகவுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டோர் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவுவிடம் கையளித்தனர்.

தொடர்ந்து போராட்டக்காரர்கள் வீதியினை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டதினால் வாழைச்சேனை பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்ச்சகர் ஜெயசுந்திர சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு நிலமையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.

Exit mobile version