Tamil News
Home செய்திகள் விமானப்படை  அதிகாரி பலி; பரசூட்டில் இருந்து குதித்த போது சம்பவம்

விமானப்படை  அதிகாரி பலி; பரசூட்டில் இருந்து குதித்த போது சம்பவம்

சிறிலங்கா இராணுவ சிறப்புப் படைப் பிரிவின் அதிகாரி ஒருவர், பரசூட்டில் இருந்து குதித்த போது, நிலத்தில் வீழ்ந்து மரணமானார்.

அம்பாறை சிறிலங்கா விமானப்படைத் தளத்தில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா விமானப்படை விமானத்தில் இருந்து, பரசூட் மூலம் குதிக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரே, எதிர்பாராத விதமாக நிலத்தில் வீழ்ந்து மரணமானார்.

சுமார் 7000 அடி உயரத்தில் இருந்து குதித்த வொரன்ட் ஒவ்பிசரின், பரசூட் சரியாக விரியாததால், அவர் நிலத்தில் வீ்ழ்ந்தாக, தகவல்கள் தெரிவிக் கின்றன.

 

Exit mobile version