விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குங்கள் – பிரித்தானிய எம்.பி.க்களுக்கு அழுத்தம்

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்ககோரி பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடை தவறு என்று பிரித்தானியாவின் விசேட தீர்ப்பாயம் அண்மையில் தீர்ப்பளித்த நிலையிலேயே இந்தத் தடையை அரசு நீக்கவேண்டும் என்றும் அதற்கான அழுத்தங்களை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் அரசுக்கும் வழங்குமாறு கோரி பிரித்தானியா வாழ் புலம்பெயர் செயல்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர் சியோபயன் மைக்டொனாஹ் உடன் ‘சூம்” செயலி மூலம் கலந்துரையாடலை மேற்கொண்ட வினோதன் காந்தலிங்கம் தலைமையிலான செயல்பாட்டாளர் குழுவினர் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க அரசுக்கு அழுத்தம் கொடுகக்குமாறு அவரிடம் கோரிக்கைவிடுத்தனர்.

மேற்படி கலந்துரையாடலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சொ.யோகலிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமலன் சீவரட்ணம் மற்றும் செயல்பாட்டாளர்களான கார்த்தீபன், யோகமனோகரன், அரவிந்தராஜ் நல்லதம்பி, கதாதரன் நாகராஜ், சாருப்பிரியன் சசிகரன், கீதரன் ராசேந்திரா ஆகியோரும் பங்கேற்றனர்.