வாழைச்சேனையில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்

596 Views

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முக்கிய தேவை ஏதும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வோருக்கு  எதிராக இராணுவத்தினரும், பொலிஸாரும் தங்களின் கடமைகளை கடுமையான முறையில் கடைப்பிடித்து வருகின்றனர்.

01 6 1 வாழைச்சேனையில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்
 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பதினொரு பேருக்கான கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினை அடுத்து, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் நேற்றுன் காலை முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

01 5 1 வாழைச்சேனையில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்
 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சகல பிரதான வீதிகளும் வெறிச்சோடி காணப்படுவதுடன், அனைத்து வீதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிஸாரின் நடமாட்டங்களும், அவசர தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் நடமாட்டங்களும் காணப்படுகின்றது.

01 8 வாழைச்சேனையில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்
 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் காணப்படும் வியாபார நிலையங்கள், தனியார் அலுவலகம் உட்பட்டவை அனைத்தும் மூடப்பட்டு காணப்படுவதுடன், மீன் விற்பனை நிலையங்கள் முற்றாக மூடப்பட்டு காணப்படுகின்றது. அத்தோடு அத்தியாவசியமற்ற வியாபார நிலையங்களை பொலிஸார் மூடுமாறு பணிப்புரை விடுத்து வருகின்றனர்.

01 15 1 வாழைச்சேனையில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்
 

அத்தோடு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இருந்து எவரும் வெளி இடங்களுக்கு செல்ல முடியாத வகையிலும், வெளி இடங்களில் இருந்து வருபவர்கள் உள்ளே வர முடியாத வகையிலும் இராணுவம் மற்றும் பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply