வான் போரில் பாகிஸ்தான் எவ்வாறு வெற்றி பெற்றது? (பகுதி 1) வேல்ஸில் இருந்து அருஸ்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் கொசியாபூர் கிராமத்து மக்களின் அமைதியான காலைப்பொழுதை பரபரபாக்கியிருந்தது அந்த பிரதேசத்தில் வீழந்து கிடந்த சீன தயாரிப்பான பில்.-15 ஈ என்ற வானில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைகளின் சிதறிய பாகங்கள். அதனை இந்திய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியிருந்தனர்.
இந்த நவீன ஏவுகணையானது முதல் முதலில் களமுனையில் பயன்படுத்தப்பட்டதற்கான ஆவண
மும் இது தான். அதாவது தற்போது பாகிஸ் தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற் பட்டுள்ள மோதல்களில் இது ஒரு மைல் கல். இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்திய கட்டுப்பாட்டு காஸ்மீர் பகுதியில் ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 மக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த புதன்கிழமை அதிகாலை இந்தியா பாகிஸ்தானின் பகுதிகளில் ஏவுகணைகளை கொண்டு தாக்கியிருந் தது. அதனை தொடர்ந்து இரு அணுவாயுத நாடுகளுக்கும் இடையிலான மோதல்கள் ஆரம்ப மாகியுள்ளன.
இந்த மோதல்கள் பல பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மிகப்பெரும் பதற்றத்தை தென்னாசிய பிராந்தியத்தில் தோற்றுவித்துள்ளது. அதேசமயம் சீனாவின் இந்த புதிய ஆயுதம் தென்னாசிய பிராந்தியத்தின் படைவலுச் சமலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது அந்த பிராந்தியத்தில் சீனாவுக்கு ஒரு வலுவான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் படை நடைவடிக்கை என்பது 1971 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவின் தரைப் படை, வான்படை மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நடைவடிக்கையாகும். இந்த தாக்குதலில் இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான SCALP missiles ஏவுகணைகள் மற்றும் HAMMER குண்டுகள், இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகள் என்பன பயன்படுத்தப்பட்டிருந்தன.
லக்க்ஷர் ஈ தொய்பா என்ற அமைப்பினரின் இடங்களை தாக்கியதாவும், பொதுமக்களின் மற் றும் பாகிஸ்தான் படையினரின் நிலைகளைத் தாக்கவில்லை என இந்தியா தெரிவித்திருந்தது. ஆனால் பாக்கிஸ்தான் அதனை தனது நாட்டின் மீதான போர் பிரகடனம் என கூறியதுடன், பதிலடி வழங்கப்படும் எனவும், இந்தியாவின் தாக்குதலில் 31 பொதுமக்கள் இறந்ததாகவும் தெரிவித்திருந்தது.
ஆனால் இந்த சண்டையில் இந்தியாவின் 5 விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தானின் படைத்துறைப் பேச்சாளர் லெப் ஜெனரல் சரீப் சௌத்திரி தெரிவித்திருந்தார். ஆனால் இன்றுவரை இது குறித்து இந்தியா வாய் திறக்கவில்லை. ஆனால் தற்போது வீழந்து கிடக்கும் சீனாவின் பி.எல்-15 வான் ஏவுகணையின் பகுதிகள் பாகிஸ்தான் அதனை பயன்படுத்தியுள்ளதை உறுதிப்படுத்துகின்றது. இது போர் தொழில்நுட்பத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
சீனாவிடம் உள்ள வான் தாக்குதல் ஏவு கணைகளில் இந்த ஏவுகணை மிகவும் உயர்தர இலக்குகளை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அதாவது அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட airborne early warning and control [AWAC] aircraft போன்ற உறவு விமானங்கள், தாக்குதல் விமானங்களுக்கு எரிபொருட்களை நிரம்பும் ராங்கர்கள், நவீன போர் விமானங்களை 124 மைல்கள் தொலைவில் வைத்து தாக்கியழிக்கும் இந்த ஏவுகணை ஒரு நீண்ட தூர வான் தாக்குதல் ஏவுகணையாகும்.
ரேடார்களின் வழிநடத்தலில் இயங்கும் இந்த ஏவுகணைகள் சீனாவின் மக்கள் விடுதலை படையின் வான்படையினால் 2012 ஆம் ஆண்டு பரிசோதிக்கப்பட்டபோதும் 2018 ஆம் ஆண்டே பாவனைக்கு வந்திருந்தது. மாக்-5 என்ற ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணை a dual-pulse solid-fuel rocket motor என்ற இயந்திரத்தை கொண்டது. அதன் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால் Its advanced navigation system, featuring active electronically scanned array [AESA] radar இவை துல்லியமாக இல்கை தாக்கியழிக்கும் வல்லமையை அந்த ஏவுகணைக்கு வழங்கியிருந்தன. அதாவது நெருக்கடியான களமுனையிலும்(Contested environments) இந்த ஏவு கணை தனது இலக்கை தப்பவிடாது என்பது அதன் பொருள்.
சீனாவிடம் உள்ள உள்ளூர் பாவனைக்காக தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளின் தூரவீச்சு 124 – 186 மைல்கள், ஆனால் ஏற்றுமதி செய்வதற்காக பயன்படுத்தப்படுவது 90 மைல்கள் தூரவீச்சுக் கொண்டவை(PL-15E). பாகிஸ்தானுக்கு வழங்கப் பட்டது 90 மைல் வீச்சுக்கொண்ட வகை. இது முதலில் பாகிஸ்தானின் சீன தயாரிப்பான JF-17 Thunder Block III என்ற விமானத்தில் தான் பயன்படுத்தப்பட்டது. பல்நோக்கு தாக்குதல் விமானமான இந்த விமானம் சீன – பாகிஸ்தான் கூட்டுத் தயாரிப்பாகும்.
இந்தியாவின் தாக்குதலுக்கு முன்னர் இந்த விமானம் பி.எல்-15 மற்றும் பி.எல்-10 ஆகிய ஏவுகணைகளை சுமந்து செல்லும் படங்களை பாகிஸ்த்தான் வெளியிட்டு அதற்கு “PAF’s potent punch” என்று தலைப்பிட்டிருந்தது. பி.எல்-10 ஏவுகணை என்பது ஒரு குறுந்தூர வான் தாக்குதல் ஏவுகணையாகும். பில்-15 இற்கு உதவியாக புறஊதா கதிர்களால் வழிநடத்தப்பட்டு குறுகிய தூரத்தில் உள்ள இலக்குகளை அழிப்பதற்கு தயாரிக்கப்பட்டது.
ஜே.எப்-17 விமானத்தின் AESA radar and modern avionics என்ற ரடார்கள் பாகிஸ்தான் வான் படையின் வான்பரப்பை பாதுகாத்து எல்லைகளை காக்கும் சக்தி கொண்டது. பல்ஹம் தாக்குதலுக்கு பின்னர் சீனா தனது ஏற்றுமதி வகை அல்லாத தனது படையினருக்கு தயாரிக்கப்பட்ட பில்-15 வகை ஏவுகணைகளை அவசரமான பாகிஸ்தானுக்கு அனுப்பியது, தனது நட்புநாட்டை பாதுகாக்கும் சீனாவின் நெருக்கத்தை காட்டியுள்ளது.
1947 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா வும் பாகிஸ்தானும் காஸ்மீர் தொடர்பில் 3 போர்களையும், பல மோதல்களையும் சந்தித்திருந் தன. 2019 ஆம் ஆண்டு பால்கோட் பகுதியின் Jaish-e-Mohammad என்ற அமைப்பின் முகாம்  மீது இந்திய வான்படையினர் மேற்கொண்ட தாக்குதின் போது இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு அமெரிக்காவின் எப்-16 விமானத்தையும், அமெரிக் காவினால் வழங்கப்பட்ட  AIM-120C-5 AMRAAM என்ற வான் தாக்குதல் ஏவுகணையையும் பாகிஸ்தான் பயன்படுத்தியிருந்தது. இந்த தாக்குதலில் இந்தியாவின் மிக்-21 விமானம் பாகிஸ்தான் பகுதிக்குள் வீழ்ந்திருந்தது.
மேலதிக விமானங்களின் இழப்பை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் தற்போதைய நிலை தென்னாசிய பிராந்தியத்தில் சீனாவின் படைத்துறை வலிமை யின் முன்னோக்கிய இயக்கத்தை காட்டியுள்ளது. இந்திய வான்படை உள்நாட்டு தயாரிப்பான தேஜா, ரஸ்ய தயாரிப்பான Su-30MKIs மற்றும் பிரான்ஸின் ரபேல் ஆகிய முன்னணி தாக்குதல் விமானங்களை கொண்டது. வான் தாக்குதல் ஏவுகணைகளைப் பொறுத்தவரையில் உள்நாட்டு தயாரிப்பான 75 மைல்கள் தூரவீச்சுக் கொண்ட Astra Mk1என்ற ஏவுகணை மற்றும் 124 மைல்கள் தூரவீச்சுக் கொண்ட ஐரோப்பாவின் MBDA Meteor என்ற ஏவுகணைகளை இந்திய வான் படை கொண்டுள்ளது.
ரபேல் விமானத்தில் இருந்து இயக்கப்படும் Meteor என்ற ஏவுகணை அதன் ramjet propulsion என்ற தொழில்நுட்பம் காரணமாக உலகில் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையாகும். எந்த இலக்கையும் துரத்திச் சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணையானது சீனாவின் பில்-15 ஏவுகணையுடன் ஒப்பிடும்போது இலக்கை துல்லியமாக தாக்குவதில் வல்லது(no-escape zones).
ஆனால் இந்த வான் போரில் பாகிஸ்த்தான் எவ்வாறு வெற்றி பெற்றது என்றால் அதற்கு அது எதிரியின் பலத்தை சரியாக கணிப்பிட்டுள்ளது. அதற்கு ஏற்றால் போல ரபேல் விமானத்தின் வான் தாக்குதல் ஏவுகணையின் தூரவீச்சு எல்லைக்கு அப்பால் நின்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தொடரும்…………
நன்றி: பல்கேரியன் படைத்துறை ஆய்வு மையம்.