சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் கடந்த பல வருடங்களாக அதிகரித்து சென்றுள்ளன. 62 பில்லியன் டொலர்கள் பெறு மதியான வர்த்தக இணைப்பு பாலத்தையும் (The China-Pakistan Economic Corridor [CPEC]) அவை வடிவமைத்துள்ளன. ஜே.எப் விமானத்தின் தயாரிப்பு தொழில்நுட்ப உரிமையையும் சீனா பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.
இந்தியாவின் படைத்துறை பலப்படுத்தல் களுக்கு இணையாக பாகிஸ்தானுக்கு சீனா தனது நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை கையாள்வதற்கான உரிமையை வழங்கியிருந்தது, அதற்கான பயிற்சிகள், தொழில்நுட்ப பரிமாற்றம் என்பவற்றையும் மேற்கொண்டதுடன், கடந்த மாதம் 28 ஆம் நாள் பிஎல்-15 ஏவுகணையையும் அவசரமாக வழங்கியிருந்தது.
இந்தியாவின் ஆயுதக் கொள்வனவு என்பது ரஸ்யா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளையே பிரதானமாக சார்ந்தது. அது ஒரு நாட்டை சார்ந்ததாக இல்லாவிட்டாலும், மிகவும் சிக்கலான ஆயத விநியோகமாகும். தற்போது பிஎல்-15 ஏவுகணையின் பிரசன்னம் என்பது சீனாவின் மூலோபாய நகர்வு தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது. அதாவது சீனா தனது நண்பனுக்கு மிக நவீன ஆயுதத்தை ஆபத்தின் போது வழங்கியது மட்டுமல்லாது, தனது புதிய ஆயுதத்தை பரீட்சிக்கும் களமுனையாகவும் அதனை பயன்படுத்தியுள்ளது. இது உலகச்சந்தையில் அதன் ஆயுத விற்பனையை அதிகரிக்கும்.
அதாவது இந்த தாக்குதல் என்பது சீனாவின் வான் மற்றும் விண்வெளி ஆளுமை தொடர்பான ஒரு பிரச்சாரமாகும்.1970 களில் அமெரிக்கா தனது வான் ஆளுமையை ஏ.ஐ.எம்-54 என்ற வான் ஏவுகணை கொண்டு உலகிற்கு காண்பித்தது போன்றது. ஆனால் இந்தியாவுக்கு இது மிகப்பெரும் பின்னடைவானது. அது மிகப்பெரும் தொழில் நுட்ப சவாலை சந்திக்கப்போகின்றது. புதுடில்லி ஏற்கனவே எஸ்-400 என்ற 25 தொடக்கம் 250 மைல்கள் தூரவீச்சுக் கொண்ட ரஸ்யாவின் ஏவுகணையை பயன்படுத்தி பாகிஸ்தானின் ரோன்களை சுட்டதாக இந்திய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் அனைத்துலக சமூகத்தின் கருத்துக்கள் கவனமாகவும் அவசரமாகவும் முன்வைக்கப்படுகின்றன. மோதலுக்கு விரைவாக தீர்வைக் காணுமாறு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்க்கோ றூபியோ தெரிவித்துள்ளார். இந்திய – பாகிஸ்தான் மோதல் களை உலகம் தாங்காது என தெரிவித்துள்ளார் கட்டாரின் வெளிவிவகார அமைச்சர். முன்னைய மோதல்கள் வழமையாக சமச்சீராக இருப்பதுண்டு, ஆனால் சீனாவின் அதி நவீன ஆயுதம் தற்போது அதனை சிக்கலாக மாற்றிவிட்டது.
பில்-15 இன் தூரவீச்சும், தாக்கு திறனும் இந்தியாவை புதிய ஏவுகணையை தயாரிப்பதற்கு தூண்டலாம்.அஸ்ரா எம்கே-3 போன்ற ஏவுகணை களை அது நவீனமயப்படுத்தலாம். அமெரிக்கா கூட தனது அடுத்த ஏவுகணையான எஐஎம்-260 ஜேஏரிஎம் என்ற ஏவுகணையை வடிவ மைத்து வருகின்றது.
வரலாற்று ரீதியாக வான் தாக்குதல் ஏவுகணைகள் தான் நவீன போரின் போக்கை தீர்மானிப்பதுண்டு. வியட்னாம் போரில் எ.ஐ.எம்-9 சைட்வின்டர் தலைமைவகித்தது. வளைகுடா போரில் ஏ.எம்.ஆர்.ஏ.ஏ.எம் வானை ஆட்சி செய்தது. இப்போது பி.எல்-15 அதேபோன்ற வெற்றியை கொடுத்துள்ளது. மேற்குலகத்திற்கும் சீனாவுக்கும் இடையில் இருந்து தொழில்நுட்ப இடைவெளி தற்போது நிரப்பப்பட்டுள்ளது.
மீற்றியோர் ஏவுகணை போலல்லாது சீனா வின் ஆயுதம் மட்டுப்படுத்தப்பட்ட பாவனையை கொண்டது. அமெரிக்காவின் ஏவுகணை கூட பல களமுனைகளில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது பி.எல்-15 இன் தகைமை பரீட்சித்து பார்க்கப்பட்டுள்ளது. பி.எல்-15 இன் செயற் திறன் JF-17 விமானத்தின் ரடார்கள் மற்றும் இலத்திரனியல் போர் தொழில்நுட்பத்தில் தங்கியுள்ளது. அது இந்தியாவின் உயர் தொழில் நுட்ட விமானங்களுடன் ஒப்பிடும்போது பின்தங்கியிருந்தது. ஆனால் ஏவுகணையின் தூரவீச்சே அவர்களுக்கு இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது. எம்மை பாகிஸ்தான் தொலைவில் இருந்து தாக்கி அழிக்கும் என்ற உளவியல் தாக்கத்தை அது இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது. தென்னாசியா வில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது அது அமெரிக்காவின் இந்தோ பசுபிக் பிராந்திய மூலோபாயத்திற்கு ஆபத்தானது என்ற செய்தியை பி.எல்-15 சொல்லியுள்ளது.
சவுதிஅரேபியாவுக்கு பைடன் அரசு AIM-120C-8 AMRAAM ஏவுகணையை வழங்க முன்வந்திருந்தது. அது சீனா மற்றும் ரஸ்யாவின் ஆயுத ஏற்றுமதியுடன் போட்டியிடும் முயற்சியா கும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்திய பாக்கிஸ்த்தான் சமர் எல்லை சண்டையாக மாற்றம் பெறலாம். அது அணுவாயுதப் போருக்கும் இட்டுச் செல்லலாம்.
பி.எல்-15 என்பது ஒரு தனி ஆயுதம் ஆனால் அது தொழில்நுட்பம், புவிசார் அரசியல், போட்டி நாடுகளின் அரசியல் என்பவற்றில் ஒரு பூகம்பத்தை தோற்றுவித்துள்ளது. எதிர்காலம் எப்படி நகரப்போகின்றது என்பது தெளிவற்றது. உலகத் தலைவர்கள் கேட்பது போல இந்தியாவும் பாக்கிஸ்தானும் போரை நிறுத்தலாம், அல்லது ரபேலின் வீழ்ச்சி தென்னாசியாவில் மிகப்பெரும் ஆயுதப் போட்டியை ஏற்படுத்தலாம்.
இந்த ஆயுதத்தை வழக்கிய நாடாகவும், அதன் மூலம் பலன் அடைந்த நாடாகவும் உள்ள சீனா இராணுவச் சமநிலை என்ற சமன்பாட்டை சிக்கலாக்கியுள்ளது. அதாவது கொசியப்பூர் பகுதியில் வீழ்ந்து கிடக்கும் சீன ஏவுகணையின் சிதறல்கள் எச்சரிக்கை மணியை வலுவாக எழுப்பியுள்ளது. மோதலில் உள்ள பிராந்தியத்தில் இந்த புதிய தொழில்நுட்பம் போரை தூண்டவும், தணிக்கவும் வழிவகுக்கலாம்.
நன்றி:
பல்கேரியன் படைத்துறை ஆய்வு மையம்.