Home செய்திகள் வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா 2019

வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா 2019

505 Views

வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா குடியிருப்பு கலாச்சார மண்டபத்தில் இன்று மதியம் இடம்பெற்றது.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அணுசரனையுடன், வவுனியா மாவட்ட கலாச்சார பேரவையும், கலாச்சார அதிகார சபையும் மாவட்டச்செயலகத்துடன் இணைந்து நடாத்தும் வவுனியா வவுனியா மாவட்ட பண்பாட்டுப்பெருவிழா மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது நடனம், கிராமிய கலையளிக்கை, சிங்கள கிராமிய நடனம், மிருதங்க இசை என பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்துடன் கலைஞர்களிற்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா, யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களேஸ்வரன், தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி க.சுவர்ணராஜா, வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ், சுந்தானந்த இந்து இளைஞர் சங்க தலைவர் தமிழ்மணி அகளங்கன், தமிழ் சங்க அமைப்பாளர் தமிழருவி சிவகுமார், மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version