Home செய்திகள் வவுனியா பெண்ணுக்கு இந்தியாவில் ‘சாதனைப் பெண்கள் விருது 2020’ வழங்கி கௌரவிப்பு

வவுனியா பெண்ணுக்கு இந்தியாவில் ‘சாதனைப் பெண்கள் விருது 2020’ வழங்கி கௌரவிப்பு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் நந்தவனம் பவுண்டேசன் பல்துறைகளிலும் சாதித்துக்கொண்டிருக்கும் பெண்களை இனங்கண்டு அவர்களை கௌரவப்படுத்தும் விருதுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் சார்பாக வவுனியாவிலுள்ள திருமதி ஜீவராணி றஜிக்குமார் உட்பட இலங்கையிருந்து தெரிவு செய்யப்பட்ட ஜவருக்கு கடந்த 08.03.2020 அன்று சென்னை சாலிக்கிராமத்திலுள்ள பிரசாத் மண்டபத்தில் இடம்பெற்ற ‘சாதனைப் பெண்கள் 2020’ எனும் விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த இருபத்தி நான்கு பெண்கள் விருதினைப் பெற்றுக்கொண்டதுடன் இலங்கையைச் சேர்ந்த ஐந்து பெண்கள் விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

இவர்களின் ஜீவராணி றஜிகுமார் (வடமாகாணம்) பாத்திமா ஸிமாரா அலி (கொழும்பு), பாத்திமா றிஸ்வானா (பண்டாரவளை) , காயத்திரி யோசப் நகுலன் (மட்டக்களப்பு), புஸ்பராணி சந்தியா (கொழும்பு) ஆகிய ஐவருக்கு இவ்விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் நந்தவனம் பவுண்டேசன் தலைவர் சந்திரசேகரன், செயலாளர் சாதிக்பாட்சா, பொருலாளர் திருமதி பா. தென்றல், ஆகியோருடன் பிரதம அதிதிகளாக திரைப்பட இயக்குநர் அகத்தியன், இலங்கை தொழிலதிபர் ஹாசிம் உமர், யுனிவர்ஸ் நிறுவுனர் நரேந்திர விவேகானந்தா (கனடா) சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் பஜிலா ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

IMG 523067b817b2aa3cedd315e22a68bf8a V வவுனியா பெண்ணுக்கு இந்தியாவில் 'சாதனைப் பெண்கள் விருது 2020' வழங்கி கௌரவிப்பு

Exit mobile version