வவுனியா நகரசபை தலைவர் விசாரணைக்கு அழைப்பு

233 Views

வவுனியா நகரசபைத்தலைவர்  காவல்துறையினரால் இன்று (15) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் வவுனியா நகரில் அமைந்துள்ள வாடிவீடு வளாகத்திற்கு விஜயம் செய்த நகரசபைத்தலைவர் அதற்கு சீல்வைத்திருந்தார்.

இதன்போது அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு ஊழியருடன் தலைவர் முரண்பட்டதாக தெரிவித்து வவுனியா காவல்  நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று நகரசபை தலைவர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply