வவுனியா தமிழ் தேசிய செயற்பாட்டாளர் மீது புலனாய்வாளர்கள் என்று கூறி  தாக்குதல்

270 Views

வவுனியா செட்டிகுளம் பகுதியின் தமிழரசுக் கட்சியின் இளைஞரணி உறுப்பினரும் அப்பகுதியின் தமிழ் தேசிய செயற்பாட்டாளருமான ஜெ.சிவாணந்தராசா என்பவர் மீது வவுனியா நேரியகுளம் புகையிரத கடவைக்கு அருகில் வைத்து இலங்கை புலனாய்வாளர்கள் என்று கூறி சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளாரகள்.

தாக்குதல் நடத்தியவர்கள் கட்சி மற்றும்  தேர்தல் செயற்பாடுகள் சமூகப் பணிகளிலும் ஈடுபடக்கூடாது என்று அச்சுறுத்தியுள்ளனர்.

IMG d3450088d4d80ef579eba2da12f0505c V வவுனியா தமிழ் தேசிய செயற்பாட்டாளர் மீது புலனாய்வாளர்கள் என்று கூறி  தாக்குதல்

இந்த சம்பவம் தொடர்பாக வவுனியா காவல் நிலையத்திலும் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்ட போதும்,தொடர்ச்சியாக இனந்தெரியாத நபர்கள் தன்னை கண்காணித்து வருவதாகவும் இதனால் அச்சத்துடன் வாழ்வதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply