வவுனியாவை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் ஊர்தி…!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் ஊர்தி பவனி இன்று காலை வவுனியாவை வந்தடைந்தது.

யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம்திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் ஆரம்பமான ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக இன்று வவுனியா நகரை வந்தடைந்தது.

இதன்போது, வவுனியாவில் நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து நகர வீதியூடாக தினச்சந்தையை அடைந்தது.

குறித்த ஊர்தி பவனியை உணர்வெழுச்சியுடன் வரவேற்ற வவுனியா மக்கள் தமது அஞ்சலிகளை செலுத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.