Home செய்திகள் வவுனியாவில் மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல்

வவுனியாவில் மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல்

வவுனியா மாவட்ட சர்வமத குழுவின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று இன்று (25.01) காலை 9மணியளவில் சுற்றுவட்ட வீதியிலுள்ள பிரதேச பல்நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

நல்லிணக்கம் தொடர்பான மாவட்ட சர்வ மதக்குழுவிற்கும், சிவில் பாதுகாப்புக்குழு, சமூகப்பிரதிநிதிகள், மத குருமார்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமான இக்கலந்துரையாடல் பிற்பகல் வரையும் இடம்பெற்றது.

DSC 2182 2 வவுனியாவில் மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல்

மக்களுக்கிடையே இன வன்முறைகளை ஏற்படுத்தாத வகையில் தொடர்ந்தும் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவும் இக்கலந்தரையாடல் இடம்பெற்றிருந்தது.

வருடத்தில் இடம்பெறும் இக்கலந்துரையாடலில் இன்று இஸ்லாமிய மதமும் முஸ்லீம்களின் வழிபாடுகளும் எனும் தலைப்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது. ஏனைய மூன்று சமயங்கள் தொடர்பாகவும் எதிர்வரும் கூட்டங்களில் கலந்துரையாடப் பட்ப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version