வவுனியாவில் சுவாமிவிவேகாநந்தரின் பிறந்ததின நிகழ்வு அனுஸ்டிக்கபட்டது!

427 Views

வவுனியாநகரசபையின் ஏற்பாட்டில்,சைவசமயத்திற்கு அரும்பணியாற்றிய சுவாமிவிவேகாநந்தரின் 157வது பிறந்ததினநிகழ்வு வவுனியா தொடரூந்துநிலைய வீதியில் அமைந்துள்ள அவரது உருவசிலைக்குமுன்பாக இன்று காலை நடைபெற்றது.

வவுனியாநகரசபையின்,உபநகரபிதா சு.குமாரசாமி,தலைமயில் இடம்பெற்ற நிகழ்வில் அடிகளாரின் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டு மலரஞ்சலி நிகழ்தப்பட்டதுடன் தமிழ்மணி அகளங்கன் விவேகானந்தர் தொடர்பான நினைவுரை ஒன்றை ஆற்றியிருந்தார்.

நிகழ்வில் முன்னாள்மாகாணசபை உறுப்பினர் ஜி,ரி,லிங்கநாதன், நகரபைஉறுப்பினர்களான,நா.சேனாதிராயா,ரி,கே.ராஜலிங்கம்,சுமந்திரன்,சமூகசேவைகள் உத்தியோகத்தர் ஶ்ரீனிவாசன்,பிரதேசசபை உறுப்பினர் சுப்பிரமணியம், சமூக ஆர்வலர்கள், வர்த்தகதரப்பினர்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது வறுமைநிலையில் உள்ள பத்துகுடும்பங்களிற்கு தமிழ்விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் பொங்கல் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Leave a Reply