664 Views
இலங்கையில் சுமார் 24 இலட்சம் பேர் நுண்கடனால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து இதற்கு தீர்வு வழங்கக்கோரி இம்மாதம் எட்டாம் திகதி பொலனறுவையில் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக ஹிங்தாக்கொடவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் 16 ஆவது நாட்களாக சுழற்சி முறையில் இடம்பெற்று வருகின்றது.
இப் போராட்டத்திற்கு ஆதரவாக வவுனியா மன்னார் முல்லைத்தீவு , கிளிநொச்சி , திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற 16 மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதிநிதிகள் குறித்த போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள்.
அந்தவகையில் வவுனியாவில் இன்று பஜார் வீதி , நகரசபை வீதி, இறம்பைக்குளம் , குருமன்காடு ,போன்ற நகர்ப்பகுதிகளில் “கொலைகார நுண்கடன் பொறிக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்” என்ற வாசகம் பெறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது இதற்கு நுண்கடனால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றியம் உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது .