ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில தினங்கள் தான் இருக்கின்றது இந்த நிலைமையில் கள நிலவரங்கள் எவ்வாறு இருக்கின்றது? அதாவது பிந்திய கருத்து கணிப்புகளின்படி யார் முன்னணியில் நிற்கின்றார்கள்?
இந்த வேட்பாளர்கள் பிரசாரங்களின் போது தாக்குதல்கள் மற்றும் சவால்களைத்தான் முன்வைக்கிறார்கள். அதோடு எச்சரிக்கைகளும் விடுகிறார்கள். குறிப்பாக ஜே.வி.பி யாழ்பாணத் தில் மக்களை எச்சரித்தது. இந்த தாக்குதல் எச்சரிக்கைகள் இந்த சவால்கள் இதை வைத்துக் கொண்டுதான் இந்த முன்னணி நிலையை பார்க்கக்கூடியதாக இருக்கிறது. மக்களுக்கு என்ன நடக்கும். என்ன செய்யப் போகிறார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து எப்படி மீள வேண்டும் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ன என்ற விடயங்களில் எல்லாம் தெளிவு இல்லை.
தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்துவிட் டன அவற்றிலே எந்த தெளிவுகளும் இல்லை. எல்லாம் வெறுமனே ஒரு பொதுப்படியான தன்மையில் அங்கே எழுதப்பட்டிருக்கின்றன. எந்த தேர்தல் விஞ்ஞாபனமும் ஆழமாக ஆராய்ந்து மக்களுடைய பிரச்சனைகளை இலங்கை தீவு என்ற அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய பிரச்சனை முஸ்லிம் மற்றும் மலைய மக்களுடைய கோரிக்கைகள் என்ன என்ற அந்த அடிப்படைகளும் ஆராயாமல் அங்கே எழுதப்பட்டிருக்கின்றன.
ஆகவே அந்த அடிப்படையில் நாங் கள் ‘முன்னணி’ நிலை என்று பார்க்கின்ற பொழுது இப்போது கடினமாக இருக்கின்றது. ஏனென்றால் இலங்கையினுடைய அரசியல் வரலாற்றில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக மூன்று பிரதான வேட்பாளர்கள் போட்டி போடுகின்றார்கள். அதோடு முதன்முறையாக வடக்கு கிழக்கிலே பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கின்றார். ஆகவே நான்கு பிரதான வேட்பாளர்களோடு இந்த போட்டி நடக்கின்றது என்று சொன்னால் வாக்குகள் எப்படி அமையப் போகின்றன என்ற கேள்வி எழுகின்றது குறிப்பாக இதுவரை காலம் இரண்டு பிரதான சிங்கள வேட்பாளர்கள் தான் கொழும்பிலே போட்டி போட்டார்கள்.
ஆனால் இப்போது மூன்று பிரதான வேட்பாளர் இருக்கின்றார்கள் ரணில் விக்ரமசிங்க, சஜித்பிரேமதாச, அனுர குமார திசாநாயக்க. ஏனையசிங்கள வேட்பாளர்களை நாங்கள் பிரதான வேட்பாளர்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் தமிழ் பொது வேட்பாளர் அரிய நேத்திரன் அவர்களை பிரதானமாக பார்க்க வேண்டும் ஏனென்றால் அது தமிழ் மக்களுடைய வாக்குகளை திருப்பக்கூடிய அளவுக்கு நிலைமை வந்திருக்கின்றது. சிவில் சமூக அமைப்புகளுடைய கூட்டு முயற்சியும் தமிழ் தேசிய கட்சிகளுடைய ஒற்றுமையும் இங்கே ஆதரவாக இருக்கின்றது. ஆகவே யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ஒரு பரிசோதனையாக இது இடம்பெறுகின்று என்ற அடிப்படையில் அரிய நேத்திரனுடைய வாக்குகளும் அநேகமாக தென் பகுதியை மையமாகக்கொண்ட சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க ஆகியோருடைய வாக்குகளில் சிதைவுகளை ஏற்படுத்தலாம். ஜே,வி.பிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடிய வாய்ப்புகள் இல்லை.
இப்போது யார் முன்னணியில் என்று பார்ப்பதாக இருந்தால், நான் அறிந்த வரையில் மிகக் கடினமான ஒன்றுதான். இலங்கையில் ஐரோப்பிய நாடுகளை போன்று ஒரு சுயாதீனமான கண்காணிப்பு அல்லது சுயாதீனமான மதிப்பீடு என்பது இல்லை. எல்லாம் அவரவர் விருப்பங்களுக்கு ஏற்பதான் இங்கே மதிப்பீடுகள் வருகின்றன. ஆகவே அதனைக் கொண்டு நாங்கள் முன்னணியை கணிப்பிட முடியாது. ஆனால் சாதாரண மக்களுடைய சிந்தனைகள், மக்களுடைய பேச்சு வழக்குகளை பார்க்கின்ற பொழுது, ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச குடும்பத் தினுடைய ஆதரவோடு ஜனாதிபதியாக வந்தவர். இப்போது சுயாதீனமாக போட்டி போட்டாலும் நாமல் ராஜபக்சவையும் விஜயதாச ராஜபக்ச மற்றும் சரத் பொண்சேகா போன்ற பிரபலங்களை எல்லாம் ஜனாதிபதி தேர்தலிலே போட்டி போட களமிறக்கியது விக்ரமசிங்க தான் என்ற கருத்து இப்போது சிங்கள மக்கள் மத்தியிலே பேசப்படுகின்றது ஆகவே அப்படி பார்க்கின்ற பொழுது சஜித்தினுடையநிலைமை கொஞ்சம் வித்தியாசமாக தெரிகின்றது. அதோடு இந்த புவிசார் அரசியல் போட்டிக் குள்ளே குறிப்பாக இந்தியாவை பார்க்கின்ற பொழுது இந்தியா
வினுடைய அணுகு முறையும் சஜித்தை நோக்கிய தாகத்தான் இருக்கின்றது.ஆனால் ஜே.வி.பி வெற்றி பெறும் அனுரகுமார திசாநாயக்க வருவார் என்ற கதைகள் பலமாக சமூக வலைத்தளங்களிலும் கொழும்பை மையமாகக் கொண்ட அரசியல் வட்டா ரங்களிலும் அடிபட்டா லும் கூட சஜித்தினுடைய வெற்றி உறுதி இல்லை என்று கொழும்புக்கு வெளியே இருக்கக்கூடிய சிங்கள மக்களின் பேச்சுக்களை பார்க்கின்ற பொழுது தெரிகின்றது. ஆகவே முன்னணி என்று கூற முடியாத ஒரு நிலை இருந்தாலும் இந்த மூன்று பேருக்குள்ளும் சஜித்தினுடைய நிலைமை தற்போது மேலோங்கி இருக்கின்ற ஒரு தன்மையை காணக்கூடியதாக உள்ளது.
அனைத்து பிரதான வேட்பாளருடைய விஞ் ஞாபனங்களும் வெளிவந்திருக்கின்றது. அது தொடர்பாகபல்வேறு ஆய்வுகளும் நடத்தப் பட்டிருக்கின்றது. உங்களுடைய பார்வையில், இனப்பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய வகையில் தங்களுடைய விஞ்ஞாபனத்தின் மூலமாக இந்த கட்சிகள் முன்வைத்திருக்கின்றதா?
குறிப்பாக ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாசா அனுரகுமார திசாநாயகா ஆகியோரு டைய மூன்று விஞ்ஞாபனங்களை நான் மூன்று வகையாக பார்க்கின்றேன். மூன்றும் அடிப்படையில் ஒற்றுமை என்பதை சொல்ல வருகின்றேன். ரணில், சஜித், அனுர இந்த மூன்று பேருடைய விஞ்ஞாபனங்களிலும் மூன்று விடயங்கள் வருகின்றன. ஒன்று பௌத்த சமயத்துக்கான முன்னுரிமை. இரண்டாவதாக ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் யோசனைகள் பரிந்துரைகள் மூன்றாவது பொருளாதார ரீதியான முன்னேற்றங்கள்.
இந்தப் பொருளாதார ரீதியான அபி விருத்தி திட்டங்கள் என்பதற்குள்ளே தமிழ் முஸ்லிம் மக்கள் இணைக்கப்படுகின்ற விடயங் கள் எதுவும் இல்லை. இதிலே நாங்கள் ரணில் விக்ரமசிங்க உடைய விஞ்ஞாபனம் 13ஐ நடை முறைப்படுத்துகிறேன் ஆனால் காணி, போலீஸ் அதிகாரம் தர முடியாது என்ற வகையிலான வாசகங்கள் அங்கே இணைக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை 17 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாண சபைகள் சட்டமூலம் எப்படி திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்ற விடயங்கள் எல்லாம் மூன்று வேட்பாளர்களின் விஞ்ஞாபனத் திலும் காணப்படுகின்றது. ஆனால் குறிப்பிடும் படியாக இலங்கையில் வாழக்கூடிய தேசிய இனங்கள் என்ற சொற்பிரயோகம் என்ற அந்த வாக்கிய பதங்கள் இல்லை அது முழுமையாக நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. 30 ஆண்டு காலம் யுத்தமும் அதன் பின்னரான 15 ஆண்டுகால சூழ்நிலையும் எதுவுமே விஞ்ஞாபனங்களில் தென்படவில்லை. இது ஒரு ஒற்றையாட்சி கட்டமைப்பு என்ற விடயம் மாத்திரம் தென்படுகின்றது. இவர்களுடைய தேர்தல் விஞ்ஞா பனங்களில் தமிழ் மக்களுக்காக எதுவும் இல்லை என்றே சொல்ல முடியும்.
தமிழரசு கட்சியினுடைய மத்திய குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதாக அறிக்கை வெளியிடப்பட்டது. அவர்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போகின்றார்கள். இப்போது ஒரு குழப்பமான நிலைமைக்கு அவர்கள் உள்ளாகி இருக்கின்றார்கள். தமிழரசு கட்சி இந்த விடயத்தில் எவ்வாறான ஒரு நிலைப்பாட்டுக்கு வரும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
நீலன் திருச்செல்வத்தினுடைய வழியில் நின்று செயற்படுகின்றார் சட்டத்தரணி சுமந்திரன். நீலன் திருச்செல்வம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கி அமைச்சராகவும் இருந்தார். பின்னர் வெளியேறி வந்தார். எங்களுக்கு இந்த அரசாங்கத்தை நம்ப முடியாது என்று சொன்னார் அதன் பின்னர்தான் பல விடயங்கள் எல்லாம் பேசியிருந்தார்.அந்த பரம்பரையில் வழிவந்தவர் போன்றுதான் நான் சடத்தரணி சுமந்திரனை பார்க்கின்றேன். ஆகவே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு என்பது அவரும் அவருடைய சில ஆதரவாளர்களும் எடுத்த முடிவாகத்தான் அது பார்க்கப்படுகின்றது. எனக்கு தெரியவில்லை.
ஏனென்றால் தமிழரசு கட்சியினுடைய யாப்பு பகிரங்கப்படுத்தப்படவில்லை. யாப்பை பார்க்கக்கூடியதாக இருந்தாலும் அதிலே உள்ளது நடக்கின்றதா என்பது வேறு கேள்வி எழுகின்றது. ஆகவே தமிழரசு கட்சியினுடைய தீர்மானம் என்பதை விட அது சுமந்திரனுடைய தீர்மானம் தான் ஒரு ஒற்றை மனிதனால் எடுக்கப்பட்ட தீர்மானம் தான். ஆனால் தமிழரசு கட்சியினுடைய பெரும்பான்மையான உறுப்பினர்கள் அல்லது மத்திய குழு பெரும்பான்மையான உறுப்பினர்கள் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவோடு இருக்கின்றார்கள்.
பொது வேட்பாளர் களம் இறக்கப்பட்டது, சர்வதேச சமூகத்தில் குறிப்பாக கொழும்பில் இருக்கக்கூடிய ராஜதந்திர சமூகத் தின் மத்தியிலே ஒரு அதிருப்தியை ஏற்படுத்தி இருப் பதாகவும் இந்தியா கூட இதனை விரும்பவில்லை எனவும் கூறப்படுகின்றது இதற்கு பிரதான காரணம் என்ன?
சர்வதேசம் விரும்பவில்லை என்று சொல்வதற்கு அவர்களுக்கு உரிமையே இல்லை. இது வாக்களிப்பு. ஜனநாயக உரிமை. அவர்கள் சொல்லு வார்கள் ஜனநாயகத்தின் படி செயற்படுங்கள் என்று. விடுதலைப் புலிகள் போர் நடத்திய பொழுது, விடுதலைப் புலிகளை ஜனநாயக வழிக்கு வாருங்கள் என்று சொன்னார்கள். பேச்சுவார்த்தைக்கு வந்த பொழுது விடுதலைப் புலிகள் ஜனநாயக வழியில் சிந்திக்க வேண்டும் என்றார்கள்.
விடுதலைப் புலிகள் மக்களை வாக்களிக்க விட வேண்டும் என்றெல்லாம் கேட்டார்கள். இப்போது தமிழ் மக்கள் தாங்களாக உணர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்றால் அதிலே அதிருப்தி, என்ற விடயங்களை அவர் சொல்லுவார்களாக இருந்தால் நிச்சயமாக தவறு. அவர் தங்களுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலோடு தங்களுடைய புவிசார் அரசியல் தேவைகளோடு தான் அதை பார்க்கிறார்கள். அவர்களுக்கு என்ன தேவை,கொழும்பில் ஒரு அரசாங்கம் வேண்டும்.தங்களுக்கு ஆதரவான சீனாவை ஆதரிக்காத அதே நேரம் ஐரோப்பிய மற்றும் மேற்கு நாடுகளுடைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற மாதிரி செயற்படக்கூடிய ஒருவர் இங்கே ஜனாதிபதியாக வேண்டும். ஆகவே ரணிலா சஜித்தா என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த போட்டிக்குள் அவர்கள் பொது வேட்பாளரை அதிருப்தியாக பார்க்கிறார்கள். எங்களுடைய பிரச்சனை அது அல்ல. சஜித்தும் அல்ல ரணிலும் அல்ல அனுரவுமல்ல இலங்கை அரசு என்ற கட்டமைப்பு எங்களுக்கு எதுவும் செய்யவில்லை எங்களுக்கு ஒரு தீர்வைக் கோருகின்றோம்.
இந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்பு இந்தஒற்றையாட்சி நாடாளுமன்றத்திற்குள் தீர்வு வராது என்று எங்களுடைய பட்டறிவின் பிரகாரம் நாங்கள் இப்பொழுது ஒரு பொது வேட்பாளர் நிறுத்தி அங்கே ஒரு தேசம் இருக்கின்றது ஒரு தேச எழுச்சி அங்கே வருகின்றது என்பதை காண்பிப்பதற்காக இதை கொண்டு வந்திருக்கின்றோம். அந்த இடத்திலே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அதிருப்தி என்றால் அது அவர்களுடைய தேவையாக இருக்கலாம். நிச்சயமாக இதுதான் எங்களுடைய கருத்து. இந்த கருத்தியல் ரீதியான ஒற்றுமையிலே நாங்கள் பலமாக இருப்போமாக இருந்தால் அமெரிக்காவோ இந்தியாவோ எங்களை நோக்கி வரக்கூடிய வாய்ப்பு இருக்கும். ஆனால் நாங்கள் பலவீனமாக இருக்கின்றோம் 15 ஆண்டு காலமாக தமிழ் தேசிய கட்சிகள் தேர்தல் அரசியலில் ஈடுபட்டு தேர்தல் வியூகங்களை வகுத்து கண்டதனுடைய உடைய தோல்விதான் இந்த நிலைமைக்கு வந்திருக்கின்றது. அவ் வப்போது சரத்தையும் மைத்திரிபாலவையும் கோட்டபாயாவையும் ஆதரித்துக் கொண்டிருந்த பின்னணிதான் இப்போது மக்களுக்கு இப்படி யொரு விரத்தி நிலை வந்திருக்கின்றது.
ஆகவே அதை இந்திய அமெரிக்க அரசுகள் சாதகமாக பார்க்க வேண்டும் ஏனென்றால் 2009 போருக்கு முழுமையாக ஒத்துழைத்தவர்கள் இந்தியாவும் அமெரிக்காவும் ஆகவே அதன் பின்னதான 15 ஆண்டுகளிலே எந்த தீர்வையும் கொண்டு வராதவர்கள் இப்போது இந்த மக்கள் தாங்களாக போடுகின்ற பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் அல்லது அந்த கருத்தியலை ஏற்றுக்கொண்டு ஒரு தீர்வுக்கு வரவேண்டும். பொது வேட்பாளர் எத்தனை வாக்குகள் எடுக்கிறார் என்பது பிரச்சனை அல்ல அந்த சிந்தனை எழுந்ததே சர்வதேசத்திற்கு ஒரு செய்திதான். பொதுவேட்பாளர் என்ற எண்ணம் ஏன் எழுந்தது என்ற அடிப்படையில் தான் அமெரிக்க இந்திய அரசுகள் இங்கே தீர்வு நோக்கி வரவேண்டும். இதுதான் நல்ல செய்தியாகஇருக்கும்.
ஏனென்றால் 2009 போருக்கு முழுமையாக ஒத்துழைத்தவர்கள் இந்தியாவும் அமெரிக்காவும் ஆகவே அதன் பின்னதான 15 ஆண்டுகளிலே எந்த தீர்வையும் கொண்டு வராதவர்கள் இப்போது இந்த மக்கள் தாங்களாக போடுகின்ற பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் அல்லது அந்த கருத்தியலை ஏற்றுக்கொண்டு ஒரு தீர்வுக்கு வரவேண்டும். பொது வேட்பாளர் எத்தனை வாக்குகள் எடுக்கிறார் என்பது பிரச்சனை அல்ல அந்த சிந்தனை எழுந்ததே சர்வதேசத்திற்கு ஒரு செய்திதான். பொதுவேட்பாளர் என்ற எண்ணம் ஏன் எழுந்தது என்ற அடிப்படையில் தான் அமெரிக்க இந்திய அரசுகள் இங்கே தீர்வு நோக்கி வரவேண்டும். இதுதான் நல்ல செய்தியாகஇருக்கும்.